பயனர்களிடம் Dropbox விடுக்கும் அவசர வேண்டுகோள்!

0
79

dropbox-02-1024x1024ஒன்லைனில் கோப்புக்களை சேமிக்கக்கூடிய கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை தரும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக Dropbox திகழ்கின்றது. இந் நிறுவனம் தற்போது தனது பயர்களிடம் ஓர் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது. இதன்படி Dropbox தளத்தில் கணக்கினை வைத்திருக்கும் பயனர்கள் தமது கடவுச் சொற்களை உடனடியாக மாற்றுமாறே அவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதிகளவான பயனர்கள் கடந்த 2012ஆம் ஆண்டின் பின்னர் இதுவரை ஒரு போதும் கடவுச் சொற்களை மாற்றாது உள்ளனர் என்பதை அந் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தனிப்பட்ட தரவுகள் ஒன்லைன் சேமிப்பகத்தில் காணப்படுவதனால் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் சில சமயங்களில் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டுவிடும். இந்த பிரச்சினையிலிருந்து பயனர்களை பாதுகாக்கவே இவ்வாறு அவசர எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தவிர வழங்கப்படும் கடவுச் சொற்கள் வலிமை மிக்கதாக இருப்பதை உறுதிப்படுத்துமாறும், இரு படி சரிபார்ப்புக்களை (Two Step Verification) அக்டிவேட் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY