இந்தியன் ஃப்ரைட் ரைஸ்

0
135

13920611_1063063463740709_2376395547467801843_nதேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி 1 கப்
பச்சை மிளகாய் 2 ( பொடியாக நறுக்கியது )
பீன்ஸ் 1/2 கப் ( பொடியாக நறுக்கியது )
கேரட் 1/4 கப் ( பொடியாக நறுக்கியது )
கோஸ் 1/4 கப் ( பொடியாக நறுக்கியது )
குடமிளகாய் 1/2 கப் ( பொடியாக நறுக்கியது )
இஞ்சி-பூண்டு விழுது 1 1/4 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்லை 1 கொத்து
வெங்காயம் 1/4 கப் ( பொடியாக நறுக்கியது )
வெங்காய தாள் 1/8 கப் ( பொடியாக நறுக்கியது )
கருப்பு மிளகு தூள் 1 1/2 மேஜைக்கரண்டி ( தேவையான அளவு )
உப்பு தூள் தேவையான அளவு
வெண்ணை 3 மேஜைக்கரண்டி

செய்முறை

1. பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து 30 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்.
2. பிறகு பாஸ்மதி அரிசியை முக்கால் வேக்காடு பதத்திற்கு வடித்து கொள்ளவும். ( உணவகங்களில் வினிகர் சேர்பார்கள் உங்களுக்கு தேவையெனில் எலுமிச்சை பழச்சாறு 1 தேக்கரண்டி சேர்த்துகோங்க சாதம் நல்ல வெள்ளையாக இருக்கும். )
3. இதில் 1/2 தேக்கரண்டி வெண்ணை சேர்த்து நன்றாக சாதத்தை பிசிறி வைத்து கொள்ளவும்.
4. ஒரு வடச்சட்டியில் வெண்ணை ஊற்றி காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக வதக்கவும். பிறகு கறிவேப்பில்லையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
5. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பீன்ஸ் , கேரட், கோஸ் மற்றும் குடமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதில் உதிரியாக வடித்து வைத்துள்ள பாஸ்மதி சாதத்தை வடச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கவும். அதில் மிளகு தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் தூவவும்.
6. அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறவும். சாதத்தில் நன்றாக சூடு ஏறி நன்றாக வெண்ணை மற்றும் காய்கறிகளுடன் நன்றாக ஃப்ரை ஆக வேண்டும். இந்த சமயத்துல பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காய தாளை தூவி இரண்டு கிளறு கிளறி இறக்கவும்.
7. சுடச்சுட பரிமாறவும். ஆறினால் சுவை மாறிவிடும்.

LEAVE A REPLY