களுபோவில வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக வந்த பெண் துஷ்பிரயோகம்: விசாரணைக்கு உத்தரவு

0
122

Rajithaகளுபோவில போதனா வைத்தியசாலையில் வைத்தியப் பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால, குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு இது குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
களுபோவில போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அலுவலகத்தின் வைத்தியரால் சம்பந்தப்பட்ட பெண் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

-ET-

LEAVE A REPLY