துருக்கி பெண் போலிஸ் ஹிஜாப் துணி அணிவதற்கு இருந்த தடை நீக்கம்

0
133

131101110050_turke_2988971hதுருக்கி பெண் போலிஸ் அதிகாரிகள் தங்களது சீருடையின் ஒரு பகுதியாக தலையை மறைக்கும் துணியை அணியும் வழக்கத்தின் மீது இருந்த தடையை நீக்கியுள்ளது.

இன்று முதல் பெண் போலிஸ் அதிகாரிகள் ஹிஜாப் துணியை தங்களது தொப்பிக்கு அடியில் அணிந்து கொள்ளலாம். சீருடையின் நிறத்தில் அல்லது எந்தவித அலங்கார மாதிரி வடிவமைப்பும் இல்லாத துணியை அணியலாம்.

ஆளும் எ.கே.கட்சி நீண்ட தலையை மறைக்கும் துணி மீதான தடையை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது. மற்றும் ஜனாதிபதி ரெசிப் தயிப் எர்துவானை விமர்சனம் செய்வோர் நவீன துருக்கியின் மதச்சார்பற்ற தூண்கள் பலவீனப்படுத்தும் நிகழ்வு இது என்று அவரை குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் ஆதரவாளர்கள் , கனடா மற்றும் ஸ்காட்லாந்தில்சமீபத்திய நகர்வான, போலிஸ் அதிகாரிகள் தலையை மறைக்கும் துணியை அணிய அனுமதிக்கப்பட்டிருப்பதை, அடிக்கோடிட்டு காட்டினார்.

LEAVE A REPLY