இதய நோயை உருவாக்கும் பித்தப்பை கற்கள்

0
101

gallstonesஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இதய நோய்களுக்கு பித்தப்பை கற்களும் ஒரு காரணம் என்று அண்மைய ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதய நோய் ஏற்படுவதற்கு இதற்கு முன் உடற்பருமன், சர்க்கரை நோய், உயர் குருதி அழுத்தம், மோசமான உணவு கட்டுப்பாடு மற்றும் அதிகப்படியான கொழுப்பு தான் காரணம் என கண்டறியப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பித்தப்பையில் உருவாகும் பித்தக்கற்களால் கூட இதயத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

அதனால் தற்போது பித்தப்பையில் கற்கள் இருப்பதை கண்டறியப்பட்டால், இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நவீன சத்திர சிகிச்சையான ஸ்பைகிளாஸ் கொலாஞ்சியோஸ்கோப்பி என்ற சிகிச்சை மூலமாக இதனை குணப்படுத்த இயலும். இதன்போது வாய் வழியாக வயிற்றுக்குள் அனுப்பப்படும் 9 மி.மீ. சுற்றளவு கொண்ட இந்த குழாய் இரைப்பை வழியாக பித்தப்பையை அடைகிறது. அதன் பின் அங்கிருக்கும் கட்டிகள் மீது மின் கதிர்களை அனுப்பி அந்த கட்டியை உடைத்து, உறிஞ்சப்பட்டு வெளியே எடுக்கப்படுகிறது. இதனால் இதயத்திற்கு வரவிருக்கும் பாதிப்பு முற்றிலும் தடுக்கப்படுவதுடன், பித்தப்பை கற்களும் அகற்றப்படுகிறது.

LEAVE A REPLY