கல்முனை அலியார் வீதியை காபட் பாதையாக புனரமைப்பு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட ஆறு கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது?

0
146

unnamed (3)கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித புனரமைப்புமின்றி, பள்ளம், படுகுழிகளுடன் படுமோசமாக காட்சியளிக்கின்ற கல்முனை அலியார் வீதியை காபட் பாதையாக புனரமைப்பு செய்வதற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சென்ற அரசாங்கத்தினால் சுமார் ஆறு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வீதியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. இதற்காக 2014-11-18 ஆம் திகதியன்று பெரும் ஆரவாரத்துடன் அடிக்கல் விழா நடத்தப்பட்டது. இதில் அப்பொளுது பாராளமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான தற்போதைய பிரதி அமைச்சர் கௌரவ எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதீதியாக கலந்து கொண்டு, பெக்கோ மெஷினில் ஏறி அமர்ந்து, வீதியின் ஒரு இடத்தை தோண்டி, புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வு பற்றி ஊடகங்களில் பெரும் எடுப்பாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஹரீஸின் முயற்சியினால் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இரண்டு வருடங்களாகியும் அந்த வீதி இன்னும் புனரமைப்பு செய்யப்படாமல் மோசமான நிலையிலையே காணப்படுகிறது. அடிக்கல் நடும் விழாவின்போது ஹரீஸினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்ட அவரது புகைப்படம் தாங்கிய விளம்பர பலகையும் இருந்த இடம் தெரியாமல் மாயமாக மறைந்துள்ளது.

இப்பாதையில் வசிக்கும் மக்கள் இரண்டு வருடங்களாய் ஏமாற்றம் அடைந்த நிலையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் இப்பாதையை சீரான வடிகான் அமைப்பு இல்லாமல் இவ்வீதியின் ஒரு பகுதியை மாத்திரம் புரணமைத்து மக்களை மீண்டும் ஏமாறறநினைப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
ஏற்க்கனவே ஒதுக்கப்பட்ட

ஐந்து கோடி அறுபத்தெட்டு இலட்ச்சத்து அறுபத்தோராயித்து எண்ணூற்றி எளுபத்தேளு ரூபாய் அறுத்தெட்டு சதத்துக்கு [56861877.68] என்ன நடந்துள்ளது. வீதி புனரமைக்கப்பட்டு விட்டது என்று பொய்யான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, அந்த பணம் சூறையாடப்பட்டு விட்டதா? இது விடயமாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறையிடுவதற்கு ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. இது பற்றிய விபரம் ஏதும் யாருக்காவது தெரிந்திருந்தால் எம்மைத் தொடர்பு கொண்டு’ அறியத்தரவும். 2014.11.18 ஆம் திகதியன்று நடைபெற்ற அடிக்கல் நடும் விழா தொடர்பான செய்திகளுடன் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படங்களை இங்கே காணலாம்.

LEAVE A REPLY