திலகரத்ன டில்ஷான் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

0
95

Tillakaratne-Dilshan_4இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திலகரத்ன டில்ஷான் சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக இன்று அறிவித்தார்.

39 வயதுடைய அவர் 87 டெஸ்ட் மற்றும் 329 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கை சார்பாக விளையாடியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தம்புளையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியுடன் விடைபெறுவதாக ஸ்போர்ட்ஸ்பெஸ்ட் வினவியபோது திலகரத்ன டில்ஷான் தெரிவித்தார்.

டில்ஷானின் ஓய்வு அறிவிப்பை ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புளையில் நடைபெறும் போட்டியை டில்ஷானுக்கான பிரியாவிடையாக நடத்தவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

329 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள திலகரத்ன டில்ஷான், 10,248 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் பந்துவீச்சில் 106 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

LEAVE A REPLY