மீன் பிடி வலையில் ஆயுதங்கள்: திருகோணமலை-தென்னமரவாடியில் சம்பவம்

0
132

small-arms-light-weapons(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-தென்னமரவாடி கலப்பு பகுதியில் மீனவரொருவரின் மீன் பிடி வலையில் நேற்று (26) மாலை ஆயுதங்கள் சிக்குண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

தன் இயக்க துப்பாக்கி ஒன்றும்-ரிபிட்டர் இன துப்பாக்கியுமே வலையில் சிக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மீனவர் வழங்கிய தகவலையடுத்தே அங்கு விரைந்த பொலிஸார் இதனை மீட்டதாகவும் தற்போது புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY