காத்தான்குடி டெலிகொம்’ வீதி அபிவிருத்தி இழுபறி: இனியென்ன செய்வது..? – பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

0
340

(NFGG ஊடகப் பிரிவு)

Rahman Engமக்களுக்கு மிக அத்தியவசியமான மற்றுமொரு அபிவிருத்தி விடயம் துரதிஸ்டவசமாக மீண்டுமொரு அரசியல் இழுபறியாக மாறிக் கொண்டிருக்கிறது.

காத்தான்குடி பிரதான வீதிக்கு அடுத்த மிக முக்கியமான வீதிகளில் ஒன்றான டெலிகொம் வீதி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ஆகியோருக்கிடையிலான அதிகாரப் போட்டியாக மாறியிருப்பது துரதிஸ்டவசமானதாகும்.

‘டெலிகொம் வீதி அபிவிருத்தி செய்யப்பட ணேவ்டும்’ என்ற மிக முக்கிய தேவை அதிகாரத்திலிருந்தவர்களினால் ஏன் மிக நீண்ட காலமாக முன்னுரிமைப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சர்யமானது.

இவ்வீதியில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பிரதான அலுவலகமும் அமைந்துள்ள போதிலும்கூட ஏன் இவ்வீதி முறையாக அவரால் இதுவரை காலமும் அபிவிருத்தி செய்யப்படவில்லையென்பது இன்னும் ஆச்சர்யமானது.

இந்நிலையில் இவ்வீதி கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் சிப்லி பாறூக் ஆகியோரின் முயற்சியினால் அபிவிருத்தி செய்யப்படப் போகிறது என்ற செய்தி எல்லோராலும் வரவேற்கப்பட்டது. அது பாராட்டுக்குரியது. அதேவேளை ஹிஸ்புல்லாஹ்வுடைய அரசியல் தலையீட்டின் காரணமாக இது நிறுத்தப்படலாம் என்ற அச்சம் தற்போது உருவாகியிருக்கிறது.

Telecom Road Rahmanஇரண்டு வருடங்களுக்க முன்னர் இவ்வீதி அகலப்படுத்தப்பட வேண்டும் என்ற நகரசபையின் கோரிக்கையினைத் தொடர்ந்து பொது மக்கள் பலரும் பல இழப்புகளுக்கு மத்தியில் தமது சொந்த இடங்களை விட்டுக் கொடுத்து இதற்காக பங்களிப்பு செய்தனர்.

இந்நிலையில் இது 9 மீட்டர் அகலம் கொண்ட, வடிகாண்களைக் கொண்ட காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் தற்போது இது 6 மீட்டர் அகலம் மட்டுமே கொண்ட கொங்கிறீற் வீதியாக அமைக்கப்படப் போவதாகவும் ஹிஸ்புல்லாஹ் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 9 மீட்டர் அகலம் கொண்ட காபட் வீதியாக இதனை ஹிஸ்புல்லாஹ் அபிவிருத்தி செய்ய தயாராக இருப்பதாகவும், சிப்லி பாறூக்கினால் தொடங்கப்பட்டுள்ள முயற்சிகளை கைவிட வேண்டும் எனவும் அவர்கள் தரப்பில் வலியுறத்தப்படுகிறது.

இந்த அரசியல் இழுபறிகள் பொது மக்கள் மத்தியில் குழப்ப நிலையினையே தோற்றுவித்திருக்கிறது.

இதன் உண்மை நிலையைக் கண்டறிவதற்காக மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளிடம் வினவிய போது பின் வரும் விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

Hizbullahஅரசாங்கத்திலுள்ள வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நிதி ஒதுக்கீட்டில் 70மில்லியன் ரூபா வரைடெலிகொம் வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டு, 6மீற்றர் கொண்ட கொங்கிறீற் வீதியாக இது அமைக்கப்படவுள்ளது . அதற்கான ஒப்பந்தம் கல்முனையை சேர்ந்த கரீம் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப வேலைகள் சிலவும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இத்திட்டத்தினை நிறுத்தி விட்டு 9மீற்றர் அகலம் கொண்ட காபட் வீதியாக அமைப்பதனை வலியுறுத்தும் கடிதமொன்று இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் RDA வுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது.

ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் தம்மால் இதனை நிறுத்துவதற்க எதுவும் செய்ய முடியாது என RDA யினால் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியிலேயே இந்த வீதி அபிவிருத்தியின் எதிர் காலம் என்னவாகும் என்ற கவலையும் குழப்பமும் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

எமதூரைப் பொறுத்தவரையில் மக்களுக்கு அவசியமான அபிவிருத்திகள் அரசியல் வாதிகளுக்கிடையிலான போட்டிகளின் காரணமாக இல்லாமல் போவதென்பது கடந்த காலங்களலும் நடந்தே வந்திருக்கிறது.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நவீன பஸ் நிலைய வேலைத்திட்டம், NFGGயினால் முன்மொழியப்பட்ட நவீன மடுவம் அமைக்கும் வேலைத்திட்டம் என்பன இதற்கு சில உதாரணங்களாகும்.

இந்நிலையில் டெலிகொம் வீதியினையும் இந்த அபாயத்திலிருந்து பாதுகாப்பது எல்லோரது கடமையாகும்.

டெலிகொம் வீதி, வாகனப் போக்கு வரத்து அதிகரிக்கும் வீதியாகவும் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்கும் வீதியாகவும் மாறி வருகினறது. இதனை நல்ல அகலமான தரமான வீதியாக அமைக்க வேண்டும் என்பதற்காக பொது மக்களும் பல இழப்புக்களுக்கு மத்தியில் பங்களிப்புக்களைச் செய்திருக்கிறார்கள். (நகர சபையினால் வட்டிக்கு பெறப்பட்ட பெருந்தொகை பணமும் இவ்வீதிக்காக செலவு செய்யப்பட்டு நாசமானதும் , தற்போது மக்களின் வரிப்பணத்திலிரந்து அந்தப் கடன் வட்இயோடு சேர்த்து இப்போதும் கூட செலுத்தப்பட்டு வருவதும் நினைவு படுத்த தக்கது)

எனவே, இவ்வீதியினை தூர நோக்கோடும் நிரந்தரமான ஒன்றாகவும் அபிவிருத்தி செய்ய ணேவ்டியது அவசியமாகும். அதே நேரம் படு மோசமான நிலையில் காணப்படும் வீதியின் அபிவிருத்திப் பணிகளை மேலும் தாமதிக்கவும் முடியாது. இதற்காக தற்போது ஒதுக்கப்பட்டிருக்கின்ற 70 மில்லியன் ரூபா பாரிய தொகை நிதி அவ்வளவு இலேசாக இரத்து செய்யப்படுவதை அனுமதிக்கவும் முடியாது.

அதே நேரம் இவ்வீதியினை, (6 மீட்டர் அகலமான) கொங்ரீட் வீதியை விடவும் சிறப்பான 9மீற்றர் அகலமான காபட் வீதியாக அமைப்பதற்குரிய உடனடி சந்தர்ப்பம் ஒன்று இருந்தால் அதனையும் புறக்கனிக்க முடியாது.

Shibly Farookஒட்டு மொத்தத்தில் நமது மக்களின் முக்கிய தேவைகளில் ஒன்றான இவ்வீதி அபிவிருத்திப் பணியனை பொறுத்த மட்டில், அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பால் இவ்வீதி அபிவிருத்தி மூலமாக மக்களுக்குக் கிடைக்கும் முழுமையான நன்மைகளை எப்படி உறுதிப்படுத்துவது என்பதே இங்கு முக்கியமாகும்.

எனவே, கிழக்கு முதலமைச்சர் மற்றும் சிப்லி பாறூக் உள்ளிட்ட தர்ப்பினருக்கும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் நிலவும் இழுபறிகளுக்கு மத்தியில் பொது மக்களின் நலன் சார்ந்த இந்த விடயம் ‘அடிபட்டு விடக்கூடாது’ என்பதில் எல்லோரும் கவனமாக இருக்க ணேவ்டும்.

இந்த சர்ச்சையில் சம்மந்தப்பட்ட அரசியல் வாதிகள் அனைவரையும் ஒரே மேடையில் அமர்த்தி சமூகத்தின் நலன்களை முதன்மைப்படுத்தி இதில் மிகச் சிறந்த தீர்மானம் ஒன்றுக்கு அனைவரையும் கொண்டு வர வேண்டும். ஒருவரை மற்றவர் அரசியலில் மலினப்படுத்துவதற்காக இந்த விடயம் பாவிக்கப்படுவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ள 70மில்லியன் தொகையும், ஹிஸ்புல்லாஹ்வினால் கொண்டுவரப்படவுள்ளதாக சொல்லப்படும் தொகையும் நமது மக்களின் நலன்களுக்காகவே பயன்படத்தப்பட வேண்டும். இரண்டு தொகைகளுமே இந்த டெலிகொம் வீதியினை மிக சிறப்பாக அபிவிருத்தி செய்வதற்கு பயன்படத்தப்படவும் முடியும். இதன்மூலம், இந்த வீதி அபவிருத்தியில் எல்லோரையும் பங்காளிகளாக மாற்ற முடியும். ஒருவரின் முயற்சியை அடுத்தவர் முறியடித்து அரசியல் செய்கின்ற வழமையான அரசியல் கலாசாரத்தை மாற்றி, சமூகத்தின் தேவையினை எல்லோருமாக இணைந்து நிறைவேற்றுகின்ற புதிய கலாசாரத்தின் தொடக்கமாக இது அமைய முடியும்.

இல்லாவிட்டால் அதிகாரப் போட்டிகளுக்கு மத்தியில் சமூகத்தின் நலன்கள் மிதித்து நசுக்கப்படுகின்ற மற்றுமொரு துரதிஸ்டவசமான வரலாறாகவே இதுவும் பதிவு செய்யப்படும்.

குறிப்பு:

சமூக நலன் சார்ந்த விடயங்களில் நமது அரசியல் வாதிகளின் போட்டி மனோ நிலையும் சமூக அக்கறையும் எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுமுகாமாக எனது அண்மைக்கால அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சில மாதங்களுக்க முன்னர் ஒரு சிறிய பாடசாலையினைப் பார்வையிட வருமாறு ஒரு சகோதரர் என்னை அழைத்தார்.ஒரு நாள் காலை நானும் அவருமாக அந்தப் பாடசாலைக்குச் சென்றோம்.

பாடசாலையின் நிலவரங்களை எம்மிடம் எடுத்துரைத்த அதன் அதிபர் இரண்டு முக்கிய தேவைகளை நிறைவேற்றித்தருமாறு என்னிடம் வேண்டினார்.

அதிலொன்று மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு போதிக்கும் தொண்டர் ஆசிரியர் ஒருவருக்கான சம்பளக் கொடுப்பனவாகும். முதலாம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறைக்கான மின்விசிறிகள் அவரது இரண்டாவது கோரிக்கையாகும்.

பாடசாலையின் நிலைமையைக் கருதி அவை இரண்டையுமே உடனடியாக நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்து விட்டு நான் வந்து விட்டேன்.

இரண்டு நாட்களில் ஒரு கவலையான செய்தி எனக்குக் கிடைத்தது. நான் செய்து கொடுக்க முன்வந்த உதவிகளைப் பெற்றுக் கொள்ள அந்தப் பாடசாலையின் நிர்வாகம் தயங்குவதாக அறிந்தேன். இதற்கான பின்னணியை விசாரித்த போது இன்னுமொரு அதிர்ச்சியான செய்தி கிடைத்தது.

நான் பாடசாலைக்குச் சென்று வந்ததையறிந்த உள்ளுர் அரசியல் வாதி ஒருவர் உடனடியாக பாடசாலை அதிபரைத் தொடர்பு கொண்டு, ‘அவரை எப்படி நீங்கள் பாடசாலைக்குள் அனுமதித்தீர்கள்..அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது.. நாம்தான் இங்கு அதிகாரத்தில் உள்ளவர்கள்..இது போன்று ஏனைய அரசியல் வாதிகளை பாடசாலைக்கு அழைத்து உதவி கோரக்கூடாது.. அப்படிச் செய்தால் உங்களுக்கெதிராக நான் நடவடிக்கை எடுப்பேன்’ என மிரட்டியதாகவும் இது தொடர்பில் வலையக்கல்விப் பணிப்பாளரிடம் முறையிட்டுள்ளதாக அந்த அதிபரை எச்சரித்ததாகவும் அறிந்தேன்.

நான் செய்து தருவதாகக் கூறிய அந்த உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு அந்த அதிபர் பின்னர் இது ஆர்வம் காட்டவில்லை.

இது போன்ற மிக சாதாரண விடயங்களில் கூட சமூக நலன்களைப் புறக்கணித்து, தமது அரசியல் நலன்களை மட்டும் உறுதிப்படுத்துவதற்காக நமது அரசியல் வாதிகள் போட்டி போடுகின்ற நிலையில் வீதி அமைப்புப் போன்ற பெரிய வேலைத்திட்டங்களில் அவர்களின் அரசியல் போக்கும் மனோ நிலையும் எப்படி இருக்கும் என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும்

LEAVE A REPLY