கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான இயந்திரங்களை மத்திய நீர்ப்பாசன திட்டங்களுக்கும் வழங்கி கிழக்கு மாகாண நீர்ப்பாசன திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்: உதுமாலெப்பை

0
174

(எம் .ஜே.எம்.சஜீத்)

Uthuma Lebbeமத்திய அரசாங்க நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான இயந்திரங்களை கிழக்கு மாகாண நீர்ப்பாசன திட்டங்களுக்கும், கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான இயந்திரங்களை மத்திய நீர்ப்பாசன திட்டங்களுக்கும் வழங்கி கிழக்கு மாகாண நீர்ப்பாசன திட்டங்களை விரைவுபடுத்த வேண்டுமென கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 62வது அமர்வு சபை தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில்  (25) நடைபெற்றது.

இதன் போது மத்திய அரசாங்க நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான இயந்திரங்களை கிழக்கு மாகாண நீர்ப்பாசன திட்டங்களுக்கும், கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான இயந்திரங்களை மத்திய நீர்ப்பாசன திட்டங்களுக்கும் வழங்கி கிழக்கு மாகாண நீர்ப்பாசன திட்டங்களை விரைவுபடுத்த வேண்டுமெனக் கோரி தனிநபர் பிரேனையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மத்திய நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்ப்பாசன குளங்கள், மற்றும் வாய்க்கால்கள், பாய்ச்சல், வடிச்சல் திட்டங்கள் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான இயந்திரங்களை பாவித்து செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதே போல் கிழக்கு மாகாண நீர்;ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவதற்கான போதிய இயந்திரங்கள் கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தில் இல்லாமல் உள்ளது.

மத்திய, மாகாண நீர்ப்பாசன திட்டங்கள் நமது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளதால் இவைகளை அபிவிருத்தி செய்வதால் நமது கிழக்கு மாகாண விவசாய குடும்பங்களின் வருமான அதிகரிப்புக்கு உறுதுணையாக அமையும்.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சென்ற 11.01.2016ம் திகதியன்று அம்;;பாறை கச்சேரியில் நடைபெற்ற போது மத்திய நீர்ப்பாசன, மாகாண நீரப்பாசன திணைக்களங்களுக்கு சொந்தமாகவுள்ள இயந்திரங்களை ஒப்பந்தங்கள் அடிப்படையில் பாவிப்பதற்கான அனுமதியினை கிழக்கு மாகாண சபையில் பெறவேண்டும் என்ற தீர்மானம்; எடுக்கப்பட்டது.

எனவே, மத்திய நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான இயந்திரங்களை கிழக்கு மாகாண நீர்ப்பாசன திட்டங்களுக்கும், கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான இயந்திரங்களை மத்திய நீர்ப்பாசன திட்டங்களுக்கும் வழங்குவதற்கான ஒப்பந்தங்களை கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களமும், மத்திய நீர்ப்பாசன திணைக்களமும் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மத்திய, மாகாண நீர்ப்பபாசன குளங்கள், அணைக்கட்டுக்கள், வாய்க்கால்களை துரிதமாக புனர்நிர்மானம் செய்வதற்காக மத்திய அரசாங்கத்தில்; நீhப்பாசன அமைச்சராகவிருந்த நிமல் சிறிபாலடி சில்வா மத்திய அரசாங்க நீர்ப்பாசன திணைக்களத்துக்குச் சொந்தமான இயந்திரங்களை மாகாண நீர்ப்பாசன திட்டங்களை புனர்நிர்மானம் செய்வதற்கும், மாகாண நீர்ப்பாசன திணைக்களத்துக்குச் சொந்தமான இயந்திரங்களை மத்திய நீர்ப்பாசன திட்டங்களை புனர்நிர்மானம் செய்வதற்கும் ஒரு இனக்கப்பாட்டை ஏற்படுத்தியதனால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குளங்களை விரைவாக அபிவிருத்தி செய்து விவசாயிகளுக்கு கையளிப்பதற்குரிய நிலைமை ஏற்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY