கனடா செல்ல இருந்தவர்களுக்கு நேர்ந்த அவலம்: ஒருவர் பலி; 10 பேர் காயம்

0
95

Elephant Attckபுத்தளம் – அநுராதபுரமட வீதியில் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் அந்தப் பிரதேசத்தால் சென்ற வேன் ஒன்று மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் வேனில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

கனடா செல்வதற்காக வடக்கில் இருந்து வந்த குழுவொன்றே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் இரு பெண்களும் 08 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

#Adaderana

LEAVE A REPLY