அரசினால் புணர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை

0
184

(பைஷல் இஸ்மாயில், சப்னி அஹமட்)

Naseer Ministerஇலங்கையிலுள்ள சிறப்பு தேர்ச்சி வாய்ந்த வைத்திய நிபுணர்களைக்கொண்டு அரசினால் புணர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பதாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச்சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏல்.எல்.முஹம்மட் நசீர் தெரிவித்தார்.

2009.05.18 அரசினால் புணர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளை சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச துணையுடன் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என கிழக்கு மாகான சபை உறுப்பினர் கோ.கருணாகரனால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரோரணைக்கு பதிலிக்கும்போது மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 62 வது அமர்வு நேற்று முன்தினம் (25) தவிசாளர் சந்திரதாச கலபெத்தி தலைமையில் இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஏற்பாட்டில் அரசினால் புணர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கு அவர்களின் உடற்கூறு வைத்திய பரிசோதணையை மேற்கொள்வதற்கும் ஆலோசணைகளைவழங்குவதற்காகவும் கிழக்கு மாகாணத்திற்கான நிபுணர்துவம் பெற்ற வைத்திய குழவொன்றை உடனடியாக அமைத்து இவர்களுக்கு தோiவாய வைத்திய தேவைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்விடயம் தொடர்பாக கடந்த சில வாரங்களாக முன்னாள் போராளிகள் மர்மமான நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் மற்றும் வலையத்தளங்கள் ஊடாக அறியக்கிடைத்தது. உண்மையில் அவ்வாறு ஓர் பிரச்சினை இருப்பின் இது தொடர்பில் உடனடியாக பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு சீர் செய்யப்பட வேண்டும். குறித்த போராளிகளின் உடற்கூறு பரிசோதனைக்கு எம்மிடம் சிறப்புத்தேர்ச்சி வாய்ந்த சர்வதேச தரமுடைய வைத்திய உபகரணங்களும், வைத்திய நிபுணர்களும் எம்மிடமுள்ளன.

ஆகவே, எம்மிடம் உள்ள வைத்திய நிபுணர்களைக்கொண்டு மாகாண மட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதர சேவைகள் பணிப்பாளரின் தலைமையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு இக்குழு மூலம் எதிர்வரும் நாட்களில் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன் எனவும் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் காணப்படும் ஆயுதப்போராட்டம் நிறைவுபெற்றதன் பின்பு இலங்கை அரசினால் புணர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையுடன் தொடர்பு கொண்டு இவ்வுடக்கூறு பரிசோதனையை செய்து கொள்ளலாம் என்றும் இச்சபையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

மேலும், இலங்கை உள்ள வைத்திய நிபுணர்களைக்கொண்டே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதேவேளை வடமாகாண சபையிலும் முன்னாள் போராளிகளின் வைத்திய பரிசோதனையை இலங்கையில் உள்ள வைத்தியர்களைக்கொண்டே நடாத்தப்பட வேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY