இத்தாலி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 260 ஆக உயர்வு

0
93

160826021612_italy_2987420gபுதன்கிழமை இரவு இத்தாலியின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தப் பகுதியில் மிகவும் பலமான நில அதிர்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

இத்தாலியப் பிரதமர் மட்டையோ ரென்ஸி அவசர நிலையை பிரகடனம் செய்திருக்கிறார். தொடக்கத்தில் 50 மில்லியன் யூரோ அவசரகால நிதிக்கு பிறகு, மேலும் பணம் மற்றும் மூலவள உதவிகள் தொடரும் என்று ரென்ஸி வாக்குறுதி அளித்திருக்கிறார்.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நாட்டின் அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் நிலப்பரப்புகளில் இருந்து கிடைக்கக்கூடிய நுழைவுச் சீட்டு விற்பனை உள்பட வருமானம் அனைத்தையும் நிவாரணப் பணிக்கென வழங்கப்போவதாக கலாசாரத்துறை அமைச்சர் டாரியோ பிரான்செஸ்கீனே தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY