சேறுநுவர பொலிஸ் பிரிவுகளில் இரு வெவ்வேறு விபத்துக்களில் ஆறு பேர் காயம்

0
145

(அப்துல்சலாம் யாசீம்-)

accident-logoதிருகோணமலை- மாவட்டத்தில் உப்புவௌி மற்றும் சேறுநுவர பொலிஸ் பிரிவுகளில் இடம் பெற்ற இரு வெவ்வேறு விபத்துக்களில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் நேற்றிரவு (25) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் சீனக்குடா-கண்டி வீதியில் உள்ள சர்வோதய விடுதியில் வசித்து வரும் மோட்டார் சைக்கிள் சாரதியான எச்.ஏ.பீ.சஹானா சதுரங்கனி (28 வயது) மற்றும் அவரது தங்கையான எச்.ஏ.பீ.சுறனி நிவர்த்திகா (26 வயது) மற்றும் பிள்ளைகளான எச்.ஏ.சாவித்தியா (03) எச்.டபிள்யூ.சதுன் (04) ஆகியோரை விபத்தில் காயமடைந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது உப்புவௌி சந்தியில் டிமோ பட்டா லொறி இவர்களை மோதி விட்டு நிறுத்தாமல் சென்றுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட லங்கா பட்டினம் பகுதியில் மீன் ஏற்றிச்சென்ற லொறி மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்று-லங்கா பட்டினம் பகுதியைச்சேர்ந்த கே.சுமித்ரா தேவி (48 வயது) மற்றும் அவரது தம்பி டி.சிவானந்தன் (47 வயது) எனவும் மீன் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY