(Poem) சாவும் சாதியும்

0
44

(Mohamed Nizous)

ஒரிசாவின் வீதிகளில்
ஒரு சாவை சுமந்து கொண்டு
பன்னிரண்டு கிலோ மீற்றர்
கண்ணீரில் நடந்து சென்ற
மலை சாதி மகனுள்ளே
அலை மோதும் கேள்வி இது.

ஏவு கணைத் தொழினுட்பம்
இருக்கின்ற நாட்டினிலே
சாவினைச் சுமந்து கொண்டு
சவக்காலை செல்வதற்கு
வண்டியில்லை ஐயா
கண்டீரா நிலைமையை?

தோளில் சாய்ந்து கொண்டு
துக்கம் போக்கியவளை
தோளில் சடலமாய்த்
தூக்கிடும் நிலைமைகள்
இந்த உலகத்தில்
யாருக்கும் வர வேண்டாம்.

உயர் சாதிப் பெண்ணென்றால்
ஓடி வந்திருப்பார்
தயாராய் நின்றிருக்கும்
தரமான வாகனங்கள்
உயிர் பிரிந்த சோகத்திலும்
உதவ ஆள் இல்லாத
துயரம் தரும் கொடுமை
துளைக்கிறது உள்ளத்தை.

சாதிக் கொடுமையினை
சவக்காலை அனுப்பி விட்டு
சாதிக்க முன் வருவீர்
சரித்திரம் மாறட்டும்.

தோளில் சாய்ந்து கொண்டு
துக்கம் போக்கியவளை
தோளில் சடலமாய்த்
தூக்கிடும் நிலைமைகள்
இந்த உலகத்தில்
இனிமேல் வர வேண்டாம்.

LEAVE A REPLY