போராளிகளுக்கு விசஊசி ஏற்றிய விடயத்தின் விசாரணையினை முடிவை அறிவிக்க வேண்டும்: தண்டாயுதபானி

0
159

(அப்துல்சலாம் யாசீம்-)

ghjyhjhjhபோராளிளுக்கு விசஊசி ஏற்றிய விடயத்தின் உண்மை நிலையினை அறிய கிழக்கு சுகாதார அமைச்சர் ஒரு பொறிமுறையினை எற்படுத்தி வெளிப்படைத்தன்மையான விசாரணையினை நடாத்தி அதன் முடிவினை அறிவிக்க வேண்டும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபானி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 62 வது சபை அமர்வு நேற்று(25) காலை 9.30 மணிக்கு தவிசாளர் ஏ.பி.சந்திரதாச கலப்பத்தி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

நேற்றைய அமர்வின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.கருணாகரம் விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்புக்குப் பொருப்பான தமிழினி உட்பட 100 இற்கும் அதிகமான முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் இறந்துகொண்டிருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது. இலங்கையில் அவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் 12000 பேர் உள்ளார்கள் இவர்களின் உடல் நிலையைப் பரிசீலித்து இவர்களின் இறப்பிலுள்ள உண்மைத் தன்மையினைக் கண்டறிந்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையின்போது உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரவித்தார்.

அவர் மேலும் சபையில் உரையாற்றுகையில் இவ்விடயத்தினை அரசியல் சார்ந்ததாகச் சிந்திக்கத்தேவையில்லை. நாங்கள் பழைய விடையங்களைக் கிளரிக் கொண்டிருக்கக் கூடாது என்பது சரியானதுதான் ஆனால் சில விடயங்களை பார்க்கின்றபோது எல்லா பக்கங்களும் சிந்திக்கவேண்டியுள்ளது. கடந்த காலங்களில் எல்லாச் சமூகத்தினர்களும் பாதிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுமுள்ளார்கள் என்பதுதான் உண்மை.

இலங்கை நாட்டில் எல்லாச் சமூகங்களும் சந்தோசமாக ஒரு புதிய வாழ்கையினை தற்போது வாழத் தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் ஒரு புதிய குற்றச் சாட்டொன்று உருவாகியுள்ளது. இது யாரை நோக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது? இது வெறுமனே வரவில்லை.இதை யாரும் பத்திரிகையில் எழுதியோ வந்ததொன்றல்ல மாறாக நமது நாட்டில் செயற்பட்டு வரும் நல்லினக்க பொறிமுறை செயலணி ஒவ்வொரு மாவட்டத்திலும் சென்று மக்களிடம் இந்த நல்லினக்கமான விடயங்களை ஏற்படுத்தவதற்கு என்ன செய்யலாம் என்ற விசாரைணகளை மக்களிடம் செய்துகொண்டுவரும் சந்தர்ப்பத்தில் கிளிநொச்சியில் இந்த விசாரணையின் போது ஒரு போராளி சொன்ன விடையம்தான் இந்த விச ஊசி விவகாரமாகும்.நாங்கள் புனர்வாழ்வு முகாமிலே இருந்தபோது விசஊசி ஏற்றப்பட்டது என்ற கருத்தினைக் கூறியுள்ளார்.

நல்லிணக்கச் சுழலிலே நான் இதனை பெரிய அளவில் கதைக்க விரும்பவில்லை. ஆனால் இதற்கு அரசு ஒரு தீர்வினைக் காணவேண்டிய பொருப்பு உள்ளது. இருந்தபோதிலும் இதன் உண்மைத் தன்மையினை நிருபிப்பதற்காக வடக்கு மாகாண சபையிலே ஒரு பொறிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் சகாதார அமைச்சு இதற்கான ஒழுங்குகளைச் செய்துள்ளது என்றார்.

நாங்கள் அமெரிக்காவுக்குச் சார்பானவர்களும் அல்ல, அவர்கள் இங்கு வந்து இவற்றையெல்லாம் செய்யவேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதுமில்லை. அமெரிக்காவின் அரசியற் கோலங்கள் பற்றி எங்களுக்கும் தெரியும். ஆனால் தமிழ் போரழிகளை பொருத்தவரையில் தங்களுடைய விடுதலைக்காகவும் தங்கள் மக்களுடைய விடுதலைக்காகவுமே போராடினார்கள் என்பதை நாங்கள் மறந்து போகக் கூடாது.அதைப்பற்றி கதைப்பதென்றால் நீண்ட நேரம் எல்லோரும் கதைக்கலாம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு விசஊசி எற்றப்பட்டது, இரசாணம் கலந்த உணவு வழங்கப்பட்டது அது உடலிலே ஊரிக் கிடந்து நாளா பக்கத்திலே இவர்களைச் சாகடிக்கச் செய்யும் என்பதற்கு சில உதாரணங்களும் நடைபெற்றிருக்கின்றது.இந்தக் கரையைப் போக்குவதற்கு விசாரணை ஒன்று கட்டாயமானது. கிழக்கு மாகாணத்திலே கனிசமான போராழிகள் இருக்கின்றார்கள்.

போர் சரியா பிழையா என்பது அல்ல பிரச்சினை. இவர்களுக்கு விசஊசி எற்றப்பட்டதா இல்லையா என்பதற்கு சரியான நீதியான வெளிப்பைடைத்தன்மையான விசாரணையைச் செய்து முடிவொன்றைச் சொல்லும்போது அதில் உண்மை நிலை இல்லை என்றால் எல்லாருக்கும் நல்லது. கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களுக்கும் வடக்கு மாகாணத்தில் வாழும் மக்களுக்கும் மட்டுமல்ல முழு இலங்கைக்கும் நல்லது. இது ஒரு விளையாட்டான விடயம் அல்ல மாகாணச் சுகாதார அமைச்சர் இதற்கான அறிவித்தலை பத்திரிகை வாயிலாகவோ வேறு எந்த வழியிலேயோ அதை விடுத்து விடயத்தினை முன்னெடுக்க வேண்டும். எழுந்தவாறாக அவர்களைத் தெரிவு செய்யலாம் அல்லது விரும்புவோர்களை மட்டும் விசாரணைக்கு உட்படத்தாலாம். இதன் உண்மைத் தன்மையைினை வெளிப்படுத்த அதற்கான ஒரு பொறிமுறையினைச் எங்களது சுகாதார அமைச்சர் செய்யவேண்டும் என்ற வேண்டுகோளையும் கல்வி அமைச்சர் எஸ்.தண்ணடாயுதபானி கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY