ரியோ ஒலிம்பிக்கில் இருந்து திரும்பிய இந்திய தடகள வீராங்கனை ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல்

0
130

201608260009544412_Marathon-runner-O-P-Jaisha-tests-positive-for-H1N1-virus_SECVPFசமீபத்தில் பிரேசில் ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மாரத்தான் போட்டியில் ஒ.பி.ஜெய்ஷா பங்கு பெற்று 89-வது இடத்தை பிடித்திருந்தார்.

இதனையடுத்து நாடு திரும்பிய ஜெய்ஷாவுக்கு புதன்கிழமை ராஜீவ் காந்தி மார்பு நோய்கள் இன்ஸ்டிடியூட்டில் சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஒ.பி.ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது நேற்று சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனையில் இயக்குநர் சசிதார் பஜ்ஜி கூறுகையில், “நோய் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருந்த போதிலும், நாங்கள் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சையை தொடங்கியுள்ளோம். மருத்துவமனையில் சேருமாறு நாங்கள் அவரை கேட்டுக் கொண்டோம். அவர் மறுத்துவிட்டார்” என்று தெரிவித்துவிட்டனர்.

முன்னதாக, ஒலிம்பிக் மராத்தான் போட்டியின் போது இந்தியா சார்பில் தண்ணீர் கூட வழங்கவில்லை எனவும், இதனால் தான் உயிருக்கே போராட வேண்டிய நிலை இருந்ததாகவும் புகார் கூறியிருந்தார். இது நாடு முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் எச்1 என்1 வைரஸ் (பன்றி காய்ச்சல்) இருப்பது தெரியவந்துள்ளது.

ரியோவில் இருந்து திரும்பிய மற்றொரு இந்திய தடகள வீராங்கனை சுதாசிங்கிற்கு பன்றி காய்ச்சல் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY