இலங்கை வருகிறார் பான் கீ மூன்

0
424

ban-ki_moonஎதிர்வரும் 31 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு வருகைதரவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள அவர் இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அவரது விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை சந்திக்கவுள்ளதோடு, யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார் என ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளார்.

ஆசிய விஜயத்தின் ஆரம்பமாக, பான் கீ மூன், நாளை சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

#Thinakaran

LEAVE A REPLY