மீன்பிடி இலாக வீதிக்கான விளம்பர பதாகை தனி நபரினால் உடைத்து நாசப்படுத்தப்பட்டுள்ளது

0
143

(எம்.ரீ. ஹைதர் அலி)

HRS_7717காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியினை செப்பனிடும் பணியினை ஆரம்பிப்பதற்காக 9ஆம் கிளை சந்தியில் நடப்பட்டிருந்த வீதி அமைத்தல் தொடர்பான விளம்பரப் பதாகையை நேற்று (24) இரவு புத்தி சுயாதீனமற்ற ஒருவர் அடித்து உடைத்து நாசப்படுத்தி இருக்கின்றார், இது எவராலும் திட்டமிட்டு செய்யப்பட்ட செயலல்ல.

இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் பலர் தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு அரசியல் ரீதியாக ஒவ்வொறு குழுவினரை குற்றம்சாட்டி முறையிட்டனர்.

இருந்தும் இந்த விடயத்தினை பெரிதுபடுத்தாமல் இதன் உண்மைத்தன்மையை விளங்கப்படுத்த வேண்டுமென்ற விடயத்தில் இச்செயலானது தான் யாரென்ற உணர்வை இழந்த புத்தி சுயாதீனமற்ற ஒரு தனிப்பட்ட நபரின் செயற்பாடாவே கருதவேண்டியுள்ளது.

காத்தான்குடி பிரதேசத்தில் பரவலாக சொல்லக்கூடிய இடங்களில் விளம்பரப் பதாதைகள் இருக்கும்போது இம்மன நோயாளி குறிப்பாக இதனை மாத்திரம் நாசப்படுத்தியுள்ளார் என்பது மிகவும் ஆச்சரியமான விடயமாகும்.

ஆகவே இந்த விடயத்தினை பெரிது படுத்தாமல் எமக்குள் அரசியல் ரீதியான எவ்விதமான மன கசப்பினையும் தோற்றுவித்து விடாமல் இருப்பதற்காக இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

HRS_7710 HRS_7722 HRS_7728

LEAVE A REPLY