காத்தான்குடியில் போதைவஸ்த்துக்கு எதிரான தொடர்ச்சியான அறிவூட்டல்: காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தீர்மானம்

0
116

(விஷேட நிருபர்)

DSCN9002காத்தான்குடி பிரசேத்தில் போதைவஸ்த்துக்கு எதிரான தொடர்ச்சியான அறிவூட்டலை மேற்கொள்வதென காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தீர்மானித்துள்ளது.

காத்தான்குடியில் நேற்றிரவு (24) ஜம் இய்யத்துல் உலமா சபையின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் போதை வஸ்த்து ஒழிப்பு மற்றும் வீதிவிபத்துக்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.அப்துல் கையூம்(சர்கீ) மற்றும் செயலாளர் மௌலவி எம்.சி.எம்.றிஸ்வான் மதனீ காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் எம்.ஐ.தௌபீக் உட்பட காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் உலமாக்கள் அதிபர்கள் முக்கியஸ்தர்கள் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது போதை வஸ்த்து பாவனையை கட்டுப்படுத்தல் மற்றும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புனர்வு வேலைத்திட்டம், வீதி விபத்துக்களை தடுப்பதற்கான அறிவூட்டல் வேலைத்திட்டம் சமூக ஒழுக்கம் போன்ற பல் வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

இதன் இறுதியில் போதைவஸ்த்துக்கு எதிரான தொடர்ச்சியான அறிவூட்டலை மேற் கொள்வதெனவும் இதற்காக பாரிய மாநாடு ஒன்றை அனைவரையும் அழைத்து நடாத்துவது எனவும் வெள்ளிக்கிழமை இடம் பெறும் ஜும் ஆக்களின் போது இது தொடர்பான விழிப்புனர்வை மேற் கொள்வதெனவும் இது தொடர்பான தொடர்ச்சியான வேலைத்திட்டத்தினை மேற் கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

DSCN9003 DSCN9004

LEAVE A REPLY