கிழக்கு மாகணத்துக்கே பாரிய சேவை செய்யும் முதலமைச்சருடன் இணைவதில் சந்தோஷமடைகிறேன்” மஞ்சுல

0
144

Manjula EPCகிழக்கு மாகாண சபை அமர்வு இன்று (25) காலை சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் கூடியது.

சபை அமர்வு நடந்து கொண்டிருக்கும்போது எதிர் கட்சி உறுப்பினராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதிதுவப் படுத்தும் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுல பெர்ணாண்டோ ஆளும் கட்சியின் பக்கம் சென்றார்.

ஆளும் கட்சியின் பக்கம் சென்ற மஞ்சுல பெர்ணாண்டோ கருத்துக் கூறுகையில்,

“கிழக்கின் அபிவிருத்தியில் மூன்று மாவட்டங்களையும் சிறப்பாக தனது சேவையில் உள்வாங்கி செய்து கொண்டிருக்கும் இந்த முதலமைச்சரின் சேவையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

எனவே, அவரின் சேவையில் நானும் பங்கு கொண்டு எனது மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்ய விரும்புகிறேன். எனவே இன்றிலிருந்து நானும் முதலமைச்சரின் சேவையுடன் இணைந்து அவரது எதிர்கால திட்டங்களுக்கு ஆதரவு வழங்கி அவருடன் இணைந்து கொள்கிறேன்” என்று கூறி எதிர்கட்சி உறுப்பினர் மஞ்சுல ஆளும்தரப்பில் இணைந்து கொண்டார்.

இன்றைய சபை அமர்வில் பல உறுப்பினர்களும் தனிநபர் பிரேரணைகளை முன்வைத்து தங்களது உரைகளையாற்றினர்.

எதிர்கட்சியில் ஆறு உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY