மிக நீண்ட நாட்களாக போதை வஸ்து மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த இருவர் கைது

0
1163

(வாழைச்சேனை நிருபர்)

05வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மிக நீண்ட நாட்களாக போதை வஸ்து மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த இருவர் வெவ்வேரு இடங்களில் வைத்து இன்று (25) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓட்டமாவடி மற்றும் மாவடிச்சேனை பகுதிகளில் வைத்து போதைவஸ்து மாத்திரைகளையும் கஞ்சாவையும் விற்பனை செய்து கொண்டு இருந்த வேளையிலயே பொலிஸாரினால் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து Neurovan – 150mg மாத்திரைகள் நாட்பதும் (40), Tramadol 50mg நூறும் (100) கஞ்சா 150g மும் இரண்டாயிரத்தி எழுநூறு (2700/=) ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

0 06 7 8

LEAVE A REPLY