இத்தாலியில் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; வீடுகள் தரைமட்டம், 73 பேர் உயிரிழப்பு

0
92

201608242006274500_73-dead-in-Italy-s-most-powerful-earthquake-since-2009_SECVPFஇத்தாலியில் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் வீடுகள் தரைமட்டம் ஆகின. இதில் 73 பேர் உயிரிழந்தனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியின் மத்திய பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. நொர்சியா மாகாணத்தில் உள்ள அம்பிரியான் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் ரோம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை உலுக்கியது. இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அக்குமோலி, அமாட்டீரிஸ், போஸ்டா, ஆர்குட்டா டெல் டேரோன்டே ஆகிய நகரங்களும் அதனை சுற்றி உள்ள கிராமங்களும் நிலநடுக்கத்தால் அதிக பதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் அலறிஅடித்துக்கொண்டு வீதிகளில் ஓட்டம் பிடித்தனர். வீடுகள் வணிகவளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பாலங்கள் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக அவர்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்திருக்க கூடும் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகினர். முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து 3 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 17 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அவற்றில் சக்திவாய்ந்ததாக ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானதாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரையில் 73 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு இத்தாலியின் மத்திய பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதும், அதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும் நினைவுகூரத்தக்கதாகும்.

LEAVE A REPLY