பெண்களை பாதிக்கும் முஸ்லிம் தனியார் சட்டத்தின் உறுப்­புரை16 கண்டிப்பாக திருத்­தப்பட வேண்டும்

0
328

lowஅனை­வ­ருக்கும் நீதி, நியாயம் மற்றும் முன்­னேற்­றத்­தினைத் தேடு­கின்ற ஒரு நாடு என்­கின்ற ரீதியில் இலங்­கைக்கு இது ஓர் எதிர்­பார்ப்பு மிகுந்த காலப்­ப­கு­தி­யாகும்.

அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ராக்கற் செயன்­மு­றைகள் பரந்த அள­விற்கு ஆலோ­சனை மிக்­க­தா­கவும், அடி­மட்­டத்­தி­லி­ருந்து தேசிய மட்டம் வரை பொது­மக்­களை ஈடு­ப­டுத்­து­வ­தா­கவும் இருப்­பது ஊக்கம் தரு­வ­தாக இருக்­கின்­றது. இலங்­கை­யர்கள் அவர்­களின் கண்­ணோட்­டங்­களைப் பகி­ரங்­க­மாக வழங்­கு­வ­தற்கும் இனி வரப்­போகும் பல வரு­டங்­க­ளுக்கு பல் பரம்­பரைத் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய செயன்­மு­றையில் ஈடு­ப­டு­வ­தற்கும் இது வாய்ப்­பினை வழங்­கி­யுள்­ளது.

அடிப்­படை உரிமை என்­பது அர­சி­ய­ல­மைப்­பிற்கு மைய­மா­ன­தாகும். சட்­டத்தின் கீழ் சகல பிர­சை­க­ளுக்­கு­மான சமத்­துவம் மற்றும் சம­மான பாது­காப்­பினைப் புதிய அர­சி­ய­ல­மைப்­பினால் உத்­த­ர­வா­தப்­ப­டுத்த முடி­யா­விட்டால், அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்புத் தொடர்­பான சகல முயற்­சி­களும் வியர்த்­த­மா­கி­விடும்.

மறு­சீ­ர­மைப்புச் செயன்­மு­றை­யா­னது சாதா­ரண சூழ்­நி­லை­களின் கீழ் மேலாண்மை மிக்க ஓர் அர­சி­ய­ல­மைப்­பினை உறு­திப்­ப­டுத்­த­வேண்டும்.

எனவே 1978ம் ஆண்டின் அர­சி­ய­ல­மைப்பின் 16ம் உறுப்­புரை தொடர்­பான கரி­சனை எழு­கின்­றது. இது அர­சி­ய­ல­மைப்பு பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்னர் இருந்த சகல எழு­தப்­பட்ட மற்றும் எழு­தப்­ப­டாத சட்­டங்­க­ளா­வன அடிப்­படை உரி­மை­க­ளுக்கு முர­ணா­ன­வை­யாக இருந்­தாலும் கூட அவற்றை செல்­லு­ப­டி­யாக்கக் கூடி­ய­தா­கவும் அமுல்­ப­டுத்­தப்­படக் கூடி­ய­தா­கவும் ஆக்­கு­கின்­றது.

நாடு முழு­வ­தி­லு­முள்ள செயற்­ப­டு­னர்கள் மற்றும் மனித உரி­மைகள் நிறு­வ­னங்­களின் கூட்­டான பெண்­க­ளுக்­கான செயற்­பாட்டு வலை­ய­மைப்பு என்கின்ற ரீதியில் நாம் 1951ம் ஆண்டின் முஸ்லிம் திரு­மணம் மற்றும் விவா­க­ரத்துச் சட்டம் தொடர்­பாக முஸ்லிம் பெண்கள் மீது உறுப்­புரை 16 ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய கணி­ச­மான தாக்கம் பற்றிக் கவ­னத்­தினை ஈர்க்க விரும்­பு­கின்றோம்.

முஸ்லிம் திரு­மணம் மற்றும் விவா­க­ரத்துச் சட்டம் மறு­சீ­ர­மைப்­பில்­லா­தது என்­பதைப் பற்றிப் பிடிப்­பதன் மூலம் முஸ்லிம் பெண்­க­ளுக்கு சட்­டத்தின் கீழ் சம­மான பாது­காப்­பினை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தாத கார­ணத்­தினால் உறுப்­புரை 16 முஸ்லிம் பெண்­களை இரண்டாம் தரப் பிர­சை­க­ளாக்­கு­கின்­றது.

தமது மனித உரி­மைகள் மற்றும் பிர­சா­வு­ரிமை என்­பன “கலா­சார மற்றும் சமய உரி­மைகள்” என்­ப­வற்றால் மீறப்­ப­டா­தி­ருப்­ப­த­னையும், சமய மற்றும் இனத்­துவப் பாகு­பாடு இல்­லாமல் இந்த நாட்­டி­லுள்ள ஒவ்­வொரு பெண்ணும், சிறு­மியும் சமத்­து­வத்­தி­னையும், அடிப்­படை மனித உரி­மை­க­ளையும் அனு­ப­விக்­கவும் அர­சி­ய­ல­மைப்பு உத்­த­ர­வாதம் வழங்­க­வேண்டும் என பால்ய திரு­ம­ணங்­களால் பாதிக்­கப்­பட்டோர் உள்­ள­டங்­க­லாக முஸ்லிம் பெண்கள் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்­புக்­கான பொது­மக்கள் பிர­தி­நி­தித்­துவக் குழு­விடம் மிக உறு­தி­யாகக் கருத்­துக்­களைத் தெரி­வித்­துள்­ளனர். புதிய அர­சி­ய­ல­மைப்­பி­லி­ருந்து உறுப்­புரை 16னை அகற்­று­வ­தனை அல்­லது மேற்­கு­றிப்­பிட்ட பார­பட்சம் மிக்க சம்­பி­ர­தாயச் சட்­டங்­களை விட அர­சி­ய­ல­மைப்பின் மேலாண்­மை­யினை அனு­ம­திக்­கின்ற திருத்­தங்­களைச் சேர்ப்­ப­தனை இது உள்­ள­டக்­கு­கின்­றது.

பல தசாப்­தங்­க­ளாகப் பாதிக்­கப்­பட்­டோ­ருடன் நெருக்­க­மாகப் பணி­யாற்­றி­வரும் முஸ்லிம் பெண்­களும் குழுக்­களும் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­திற்­கான திருத்­தங்­க­ளுக்­கா­கவும், காதி நீதி­மன்ற முறை­மையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தவும் ஆத­ரித்து வாதாடி வரு­கின்­றனர். முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தினால் முஸ்லிம் பெண்கள் எதிர்­கொண்ட அநீ­தி­யான எண்­ணி­ல­டங்கா வழக்­கு­களை பெண்கள் குழுக்கள் ஆவ­ணப்­ப­டுத்­தி­யுள்­ளன.

இந்த அநீ­தி­யா­னது இச்­சட்­டத்­தி­லுள்ள பார­பட்­ச­மான பிரி­வு­களால் ஏற்­ப­டு­கின்­றது என்­ப­தற்கு திரு­ம­ணத்­துக்­கான ஆகக் குறைந்த வய­தெல்லை குறிப்­பி­டப்­ப­டாமை மற்றும் தன் திரு­ம­ணத்­துக்­கான சம்­ம­தத்தை தானே தெரி­விக்க முடி­யா­தி­ருக்­கின்­றமை, ஆணுக்கும் பெண்­ணுக்கும் உள்ள விவா­க­ரத்­துக்­கான சம­மற்ற நட­ப­டிகள், எந்­த­வொரு நிபந்தனையும் அற்ற பல­தா­ர­மணம், நட்­ட­ஈடு தொடர்­பி­லான தன்­னிச்­சை­யான நட­வடிக்கைகள் போன்­றன சில எடுத்­துக்­காட்­டு­க­ளாகும்.

இலங்கை முழு­வதும் முஸ்லிம் சமூ­கத்­துக்குள் இடம் பெற்­று­வரும் பெரும் தொகை­யான பால்ய திரு­ம­ணங்கள் ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இத்­த­கைய பால்ய திரு­ம­ணங்­க­ளுக்கு வலுச் சேர்ப்­பது முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டமும், அர­சி­ய­ல­மைப்பின் உறுப்­புரை 16உம் ஆகும்.

சம்­பவத் தர­வு­க­ளுக்கு மேல­தி­க­மாக, வைத்­தி­ய­சா­லை­க­ளி­லுள்ள திரு­ம­ணப்­ப­திவு மற்றும் மகப்­பேற்று பிரி­வு­க­ளி­லி­ருந்தும், பால்ய திரு­ம­ணங்கள் தொடர்­பான ஆய்­வு­க­ளி­லி­ருந்தும் பெறப்­பட்ட தர­வு­களின் படி பால்ய திரு­ம­ணங்­களும், பால்ய மகப்­பேறும் பர­வ­லாக நடை­மு­றையில் இருக்­கின்­றன என்­ப­துடன் எந்­த­வி­த­மாக சட்ட ரீதி­யான பாது­காப்பு ஏற்­பா­டு­களும் இன்­மை­யா­னது இவற்­றுக்கு முக்­கி­ய­மாக மேல­தி­க­மாக துணை செய்­கின்­றன.

கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள, இரு மாவட்­டங்­களின் கீழான நான்கு பிர­தேச சபைக்­குட்­பட்ட பிரி­வு­களில் பதிவு செய்­யப்­பட்ட திரு­ம­ணங்கள் தொடர்­பான தர­வுகள் சேக­ரிக்­கப்­பட்­டதில் 2014ம் ஆண்டில் 143 திரு­ம­ணங்­களும், 2015ம் ஆண்டின் ஆரம்ப சில மாதங்­களில் மட்டும் 118 திரு­ம­ணங்­களும் வயது குறைந்த திரு­ம­ணங்­க­ளாக இருப்­பதை சுட்டி நிற்­கின்­றன.

சிவில் நீதி­மன்­றங்­க­ளி­லி­ருந்தும் குறிப்­பி­டத்­தக்க வகையில் வேறு­பட்­ட­தா­கவும், படித்­தரம் குறைந்­த­தா­கவும், பாதிக்­கப்­பட்ட நப­ருக்கு ஒரு சட்ட பிர­தி­நி­தித்­து­வத்தை அனு­ம­திக்­கா­த­து­மான காதி நீதி­மன்ற முறை­மை­யினால் தாம் பார­பட்­சத்­துக்­குள்­ளாக்­கப்­பட்­ட­தாக நாட்டின் சகல பகு­தி­க­ளிலும் உள்ள முஸ்லிம் பெண்கள் எத்­த­னையோ சந்­தர்ப்­பங்­களில் தெரி­வித்­துள்­ளனர்.

இந்­நீ­தி­மன்­றங்­களின் தகு­தி­யற்ற காதி­மார்­க­ளாலும், ஜூரர்­க­ளாலும் பெண்கள் அடிக்­கடி தரக்­கு­றை­வாக நடாத்­தப்­ப­டு­கின்­றனர்; நீதி­மன்­றத்தில் அவர்­க­ளது கண­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வதைப் போன்ற சம­னான நடாத்­துகை அவர்­க­ளுக்கு கிடைப்­ப­தில்லை; நீதி­மன்­றத்தில் வார்த்தைத் துஷ்­பி­ர­யோகம், அச்­சு­றுத்தல், இழி­வாக நடத்­தப்­படல் போன்­ற­வற்றின் அச்ச மேலீட்டால் தமது தரப்பை எடுத்துக் கூற முடி­யாமை; என்­பன அவர்­க­ளது வழக்கு முடியும் மட்டும் தொடர்ச்­சி­யாக இடம்­பெ­று­கின்­றன.

இங்கு கவ­னிக்­கப்­பட வேண்­டிய முக்­கி­ய­மான விடயம் யாதெனில், காதி­நீ­தி­மன்ற முறை­மை­யா­னது, வரி செலுத்­து­ப­வர்­களின் பணத்­தினால் அர­சாங்­கத்தால் அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்டு இயங்கும் ஒன்­றாக காணப்­படும் அதே நேரம், பெண்கள் திரு­மணப் பதி­வா­ளர்­க­ளா­கவோ, காதி­மார்­க­ளா­கவோ, ஜூரர்­க­ளா­கவோ, அல்­லது காதி சபை அங்­கத்­த­வர்­க­ளா­கவோ எந்த ஒரு அதி­கா­ர­மு­டைய பத­வியில் இருப்­ப­த­னையும் தடை செய்­வது மட்­டு­மன்றி திட்­ட­மி­டப்­பட்ட பால்­நிலை பார­பட்­சத்­தினை தெளி­வாக குறித்து நிற்­கி­றது. (முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம்: பிரிவு: 8/12/14/15).

உறுப்­புரை 16 இனைத் திருத்­து­வ­தற்­கான அல்­லது நீக்­கு­வ­தற்­கான எதிர்ப்­பா­னது பிர­தா­ன­மாக, முஸ்லிம் சமூ­கத்தின் மேலான நலனில் அக்­கறை கொண்­டுள்­ள­தாகக் கூறிக் கொண்டு, நிலை­மையை இப்­ப­டியே வைத்­தி­ருக்க விரும்பும் பழ­மை­வா­தி­க­ளி­ட­மி­ருந்து வந்­துள்­ளது. இந்த குழுக்­களால் முன்­வைக்­கப்­பட்ட கருத்­துக்­களில், முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­ட­மா­னது ஷரீ ஆச் சட்­டத்தின் அடிப்­ப­டையில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தனால் அதனை மாற்ற முடி­யாது என்­பதும் உள்­ள­டங்கும்.

எவ்­வா­றி­ருப்­பினும் உண்­மையில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­ட­மா­னது ஷரீஆச் சட்­டத்தின் பல்­வேறு வகை­யான பிரி­வு­களைக் கொண்ட சட்­டங்­க­ளையும், உள்­நாட்டு வழக்­காற்று முறை­மை­க­ளையும் மட்­டு­மன்றி ஷரீ­ஆ­வுக்கு முற்­றிலும் முர­ணான பிரி­வு­க­ளையும் கொண்­டுள்­ளது.

இதற்கு உதா­ரணம் இஸ்­லாத்தில் தடை­செய்­யப்­பட்­டுள்ள கைக்­கூலி(சீதனம்) என்­ப­தனை இச்­சட்டம் அங்­கீ­க­ரித்­துள்­ள­மை­யாகும்.

ஏனையோர், முஸ்லிம் சமூகம் பல்­லி­னத்­துக்கு எதி­ரான மூலங்­களால் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தனால் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தினை பாது­காக்க வேண்டும் என்று கோரு­கின்­றனர். ஆயின், அர­சி­ய­ல­மைப்பில் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான பாது­காப்பு என்­பது கலாச்­சார / சமய உரி­மை­களை உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்பதற்காக பெண்களின் சமத்துவத்துக்கான உரிமையினை குழி தோண்டிப் புதைக்கும் பாரபட்சமான குடும்பச் சட்டங்களை, அரசியலமைப்புச் சட்டத்தினை விடவும் மேலோங்க அனுமதிப்பது என்பதல்ல.

புதிய உரிமைகள் அடிப்படையிலான அரசியலமைப்பானது கட்டாயமாக முஸ்லிம் பெண்களுக்கு சமனான சட்ட அந்தஸ்த்தையும், சட்டத்தின் கீழ் சமனான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். அரசியலமைப்பினை அதியுயர் சட்டமாக்குவது அல்லது உறுப்புரை 16 இனைத் திருத்தியமைப்பதானது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினை ஒப்புரவானதாக திருத்தியமைப்பதற்கும், சமூகத்தில் நடைமுறையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு வழியை அமைப்பதாகவும் அமையும்.

உறுப்புரை 16 இன் சிக்கலை நீக்குவதற்கு பல அணுகுமுறைகள் காணப்படுகின்றன. ஆனால் அதனை மாற்றாமல் அப்படியே வைப்பதென்பது ஒரு தெரிவல்ல.

இலங்கை தன் பிரசைகள் அனைவரையும் சமமாக நடாத்தும் ஒரு முற்போக்கான நாடாக வர வேண்டுமெனின், பெண்களின் உரிமைகளை முற்போக்கான முறையில் அனுபவிக்கச் செய்வது இந்த வேளையில் அதி முக்கியமானதாய் இருக்கும். எந்த ஒரு பிரசையும் அவனது அல்லது அவளது சமய அல்லது இனத்தின் காரணமாக கைவிட்டு விடப்படக்கூடாது.

-Vidivelli-

LEAVE A REPLY