இத்தாலியில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

0
91

201608091459513921_46-magnitude-earthquake-in-Ecuadoran-capital-Quito_SECVPFஇத்தாலியின் மையப் பகுதியில் பெருஜியா நகரம் உள்ளது. அதன் அருகேயுள்ள அமாட்ரிஸ் நகரில் இன்று 6.2 ரிக்டர் அளவில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் பூமி கடும் இரைச்சலுடன் குலுங்கியது. அப்போது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்தனர். பூகம்பம் ஏற்பட்டதை உணர்ந்த அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

மலைப்பகுதியான அமாட்ரிஸ், அக்குமோலி மற்றும் அர்குவாட்டா டெல் ட்ரோண்டோ ஆகிய பகுதிகளில் பெரும்பாலான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இருளில் தவித்தனர். பூகம்பத்தில் ரோடுகளில் பிளவு ஏற்பட்டு துண்டானது. பாலங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் உயிர் பிழைக்க ஓடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

பூகம்பத்தால் ஆங்காங்கே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, அமாட்ரிஸ் நகரின் பாதி பகுதி முற்றிலும் அழிந்து விட்டது. ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. ரோடுகள் துண்டானதால் மற்ற பகுதிகளுடன் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தில் சிக்கி 10 பேர் பலியானதாக முதற்கட்டம தகவல் வெளியானது. தொடர்ந்து ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY