காத்தான்குடி நகர சபை பிரிவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு பின்னர் குப்பைகளை அகற்றும் பணி

0
89

unnamed (4)மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபை பிரிவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு பின்னர் குப்பைகளை அகற்றும் பணி இன்று(24.8.2016) புதன்கிழமை இடம் பெற்றது.

காத்தான்குடி நகர சபையினால் கடந்த இரண்டு வாரங்களாக குப்பைகள் எதுவும் அகற்றப்படவில்லை. கடந்த 11.8.2016 தொடக்கம் இந்த குப்பை அகற்றும் பணி இடை நிறுத்தப்பட்டது.

காத்தான்குடியில் சேரும் குப்பைகளை காத்தான்குடி நகர சபை கொட்டி வந்த காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி வாவிக்கரை யோரத்தில் குப்பைகளை கொட்டக் கூடாது என மட்டக்களப்ப நீதவான் நீதிமன்றம் விதித்த தடையையடுத்து இந்த குப்பை அகற்றும் பணி இடை நிறுத்தப்பட்டதாக காத்தான்குடி நகர சபையின் செயலாளர் எஸ்.எம்.ஸபி தெரிவித்தார்.

பின்னர் இதற்காக தற்காலிக இடமொன்றை அடையாளம் கண்டு குப்பைகளை அங்கு கொட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று புதன்கிழமை தொடக்கம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அதே நேரம் மட்டக்களப்பு கொடுவாமடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின் நிர்மானப்பணி முடிவடையும் வரை நான்கு மாத காலத்திற்கு மீண்டும் ஏற்கனவே குப்பைகளை கொட்டி வந்த காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி வாவிக்கரையோரத்தில் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு குப்பைகளை கொட்டு வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை மீளக் கோருவதற்கு மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வாரங்களாக குப்பைகள் அகற்றப்படாததால் காத்தான்குடியின் பல இடங்களிலும் குப்பைகள் தேங்கிக் காணப்படுவதுடன் பல இடங்கள் அசுத்தமடைந்து காணப்படுவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

unnamed (1)

unnamed (2)

unnamed (4)

unnamed (3)

LEAVE A REPLY