கோட்டா முறையில் பெண்கள் உள்ளுராட்சி மன்றம் மாகாண சபை மற்றும் பராளுமன்றம் என்பவற்றுக்கு உறுப்பினர்ளாக நியமிக்கப்படல் வேண்டும்- சல்மா ஹம்சா

0
256

(விசேட நிருபர்)

unnamedகோட்டா முறையில் பெண்கள் உள்ளுராட்சி மன்றம் மாகாண சபை மற்றும் பராளுமன்றம் என்பவற்றுக்கு உறுப்பினர்ளாக நியமிக்கப்படல் வேண்டுமென பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான திருமதி சல்மா ஹம்சா தெரிவித்தார்.

வன்னியிலிருந்து யுத்தத்தினால் இடம் பெயர்ந்து ஆரையம்பதி பிரதேசத்தில் வசித்து வரும் முன்னாள் போராளிக்குடும்பங்களுக்கு தைய்யல் இயந்திரங்களை வழங்கி வைத்த வைத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர் இலங்கை அரசியலில் 25 வீத இட ஒதுக்கீடு இந்த நல்லாட்சி அரசாங்கம் பெண்களுக்காக வழங்கியிருக்கின்றது. இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

ஆனால் வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் என்பவற்றிற்கு கோட்டா முறையில் பெண்கள் நியமிக்கப்படல் வேண்டும்.

இந்த நடைமுறை இலங்கையில் இல்லை. இதை இந்த நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் அனைத்து துறைகளுக்கும் அரசியல் அவசியமாகின்றது. பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கு கூட அரசியல் தேவைப்படுகின்றது. கல்வி சுகாதாரம், வேலை வாய்ப்பு என பல துறைகள் அரசியலோடு பின்னிப்பிணைந்து காணப்படுகின்றன.

இதில் அனேகவற்றுடன் பெண்களும் தொடர்பு படுகின்றனர். இதனால் பெண்;களுக்கு இலங்கை அரசியலில் சரியான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதுடன் கோட்டா முறையில் பெண்கள் உள்ளுராட்சி மன்றம் மாகாண சபை மற்றும் பராளுமன்றம் என்பவற்றுக்கு உறுப்பினர்ளாக நியமிக்கப்படல் வேண்டும்.

சுpல நாடுகளில் சட்டத்தை இயற்;றும் குழுக்களில் கூட பெண்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர். கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 33 வீதம் பெண்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீட்டைக் கோரியும் அவர் அதை நிறைவேற்ற வில்லை. எனினும் இந்த அரசாங்கம் 25 வீத்தினையாவது தந்துள்ளது.

வன்னியிலிருந்து யுத்தத்தினால் இடம் பெயர்ந்து ஆரையம்பதி பிரதேசத்தில் தங்கி வாழும் குடும்பங்களில் 27 குடும்ப பெண்களுக்கு 21 நாட்களைக் கொண்ட தைய்யல் பயிற்சியினை வழங்கினோம்.

இவர்களுக்கு தைய்யல் இயந்திரங்களை தருவாக வாக்குறுதியளித்தும் அது தாமதமாகியே சென்றது. இதையடுதது இவர்களுக்கு உதவுவதற்காக புகலிடப் பெண்கள் நண்பிகள் வட்டத்தினால் நிதிதரப்பட்டது. அந்த நிதியின் மூலம் இந்த தைய்யல் இயந்திரங்களை இவர்களுக்கு வழங்குகின்றோம். இதன் ஒவ்வொரு தைய்யல் இயந்திரமும் தலா 15000 ரூபாவாகும்.

27 பெண்களில் 9 பேருக்கு இப் போது தைய்யல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்னர் ஏனையோருக்கும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதைக் கொண்டு இவர்களின் வாழ்வதாரம் முன்னேற வேண்டும் இப்படியான குடும்பங்களுக்கு நாம் உதவ வேண்டும் என்றார்.

இந்த வைபவத்தில் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி எம்.நமசிவாயம், மற்றும் மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் தலைவர் வி.கமலதாஸ் காத்தான்குடி காதிநீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY