கணவர்மார் இல்லாத வீடுகளுக்கு இரவுநேரம் சென்று கதவைத் தட்டும் இளைஞர் கைது; மன நல அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்று உத்தரவு

0
227

187691329_newsthumb_nithiதெல்­தெ­னிய, வத்­தே­கம பிர­தே­சங்­களில் பெண்கள் இருக்கும் வீடு­க­ளுக்கு இரவு நேரங்­களில்  சென்று ‘கதவை திற’ என கூறி கதவை தட்டும் இளைஞர் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

கைது செய்­யப்­பட்ட இளைஞர் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், சந்­தேக நபரை மன­நல வைத்­தி­ய­சா­லை­யொன்­றுக்கு அழைத்து சென்று பரி­சோ­தனை செய்து மன­நல அறிக்­கையை மன்றில் சமர்ப்­பிக்­கு­மாறு நீதிவான் பொலி­ஸா­ருக்கு தெரி­வித்­துள்ளார்.

 

கண­வன்மார் இல்­லாத நேரம் பார்த்து அவ்­வீ­டு­க­ளுக்கு சென்று குறித்த சந்­தேக நபர் கதவை தட்­டு­வ­தா­கவும், இவ்­வாறு தமது கண­வன்மார் இல்­லாத வேளை­களில் கத­வினை தட்டி தொந்­த­ரவு செய்­வ­தனால் தமது பிள்­ளை­க­ளுக்கு கற்றல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பதில் சிக்­கல்கள் நில­வு­வ­தாக பாதிக்­கப்­பட்ட பெண்­களால் வத்­தே­கம பொலிஸ் நிலை­யத்­துக்கு முறைப்­பாடு அளிக்­கப்­பட்­டி­ருந்தது. அதற்­க­மைய விசாரணைகளை மேற் கொண்டிருந்த வத்தேகம பொலிஸார் சந் தேக நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

 

LEAVE A REPLY