தாஜூடீன் நாமல் ராஜபக்ஸவின் நண்பர் என்றால் ஏன் அவர் விசாரணை நடத்த கோரவில்லை – ரஞ்சன் ராமநாயக்க

0
152

thajudeen_CIபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, வசீம் தாஜுடீன் தமது நெருங்கிய நண்பர் என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார் எனவும் அவ்வாறு என்றால் ஏன் அவரது மரணம் பற்றி விசாரணை நடத்த நாமல் கோரவில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

வசீம் தாஜூடின் நல்ல நண்பர் எனவும் அவரது வீட்டுக்கு தாம் செல்வதாகவும், அவர் தமது வீட்டுக்கு வருவதாகவும் நாமல் ராஜபக்ஸ கூறுகின்றார் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

உங்களது நெருங்கிய நண்பர் ஒருவர் வாகனத்தில் எரியுண்டு கொல்லப்படுகின்றார் ஏன் நீங்கள் அவரது மரண வீட்டுக்கு செல்லவில்லை என தாம் நாமலிடம் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.

உங்களது தந்தை ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஏன் இந்த மரணம் பற்றி விசாரணை நடத்தவில்லை என தாம் கேள்வி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அந்த மரண வீட்டில் குழப்ப நிலைமை காணப்பட்டதனால் தாம் இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை என நாமல் ராஜபக்ஸ கூறுவதாக தெரிவித்துள்ளார்.

மிக நெருங்கிய நண்பர் ஒருவர் மர்மமான முறையில் மரணித்த சம்பவம் தொடர்பில் அதிகாரத்தில் இருந்த காலத்தில் விசாரணை நடத்தப்படவில்லை, மரண வீட்டுக்குக்கூட செல்லவில்லை இது தொடர்பில் சந்தேகம் எழுவது நியயமானது என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY