ஹஜ் கடமைக்காக முஹம்மத் சீனாவிலிருந்து சவூதிக்கு 8150 கி.மீ. சைக்கிள் பயணம்

1
248

2sikelll1இவ்­வ­ருடம் புனித ஹஜ் யாத்­தி­ரையில் பங்­கேற்கும் நோக்­குடன் சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் சைக்­கிளில் 8150 கிலோ மீற்றர் தூரம் பய­ணித்து சவூதி அரே­பி­யாவை வந்­த­டைந்­துள்ளார்.

முஹம்மத் எனும் பெய­ரு­டைய குறித்த நபர் சீனாவின் சின்­ஜியாங் மாநி­லத்­தி­லுள்ள தனது வீட்­டி­லி­ருந்து புறப்­பட்டு சுமார் இரண்டு மாத காலம் இதற்­காக தொட­ராக சைக்­கிளில் பய­ணித்­துள்ளார்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் தாயிப் நகரை வந்­த­டைந்த இவரை அங்­குள்ள உள்ளூர் சைக்கிள் ஓட்ட குழு­வினர் வர­வேற்று மக்­காவின் ஏனைய பகு­தி­க­ளுக்கு அழைத்துச் சென்­றுள்­ளனர்.

சீனா­வி­லி­ருந்து இம் முறை 14500 பேர் புனித ஹஜ் யாத்­தி­ரைக்­காக சவூ­திக்கு பய­ணிக்­கின்­றனர். இவர்­களில் ஏலவே 11000 பேர் 37 விமா­னங்கள் மூல­மாக சவூ­தியை வந்­த­டைந்­துள்­ளனர்.

எனினும் இவர்­களில் முஹம்மத் மாத்­தி­ரமே சைக்கிள் மூல­மாக மிகவும் கடி­ன­மா­ன­தொரு பய­ணத்தை மேற்­கொண்­டுள்ளார்.  இவர் ஏன் இவ்­வா­றா­ன­தொரு பயண வழியை தேர்ந்­தெ­டுத்தார் என்­ப­தற்­காக கார­ணங்கள் இது­வரை வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

2007 ஆம் ஆண்டு 63 வய­தான செச்­னிய நபர் ஒருவர் 12 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் சைக்கிளில் பயணித்து ஹஜ் கடமையை நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

  1. அல்லாஹ் அவருக்கு இருவுலக வாழ்விலும் வெற்றி தருவானாக .ஆமீன்

LEAVE A REPLY