இத்தாலியில் நில நடுக்கம்:பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

0
99

201608241246555387_Italy-earthquake-leaves-14-dead-Amatrice-town-in-ruins_SECVPFஇத்தாலியில் இன்று அதிகாலை 3.36 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 14 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இத்தாலியில் இன்று அதிகாலை 3.36. மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 14 பேர் பலியாகி உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது. இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி செய்ய 3ஹெலிகாப்டர்கள், 6 வாகனங்கள் உதவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இத்தாலியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி போயுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியே வந்து வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY