அடைக்கலம் கேட்டு கிரீஸ் எல்லையில் 41 ஆயிரம் அகதிகள் தஞ்சம்

0
96

201608240324260267_Greece-says-at-least-41000-asylum-seekers-on-its-territory_SECVPFஉள்நாட்டு போர் காரணமாக சிரியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏராளமான மக்கள் அகதிகளாக படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர். அதேபோல், ஈராக் உள்ளிட்ட சில வளைகுடா, அரபு நாடுகளில் இருந்தும் அகதிகளாக மக்கள் வெளியேறுகின்றனர்.

அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய யூனியனுக்கு செல்பவர்கள் கிரீஸ் வழியாகத் தான் செல்ல முடியும். இவ்வாறு வரும் அகதிகளில் பலர் படகு கவிழ்ந்து வழியிலேயே இறந்து போகின்றனர்.

இந்நிலையில், தஞ்சம் கேட்டு கிரீஸ் நாட்டு எல்லையில் 41 ஆயிரம் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் உள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மட்டும் சுமார் 54 ஆயிரம் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் கிரீஸ் எல்லையில் காத்திருப்பதாக ஐ.நா சேவை மையங்கள் எடுத்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

அதில் 41 ஆயிரம் பேர் தஞ்சம் அடைய விரும்புவாக கோரிக்கை விடுத்துள்ளனர். 2 ஆயிரம் பேர் மீண்டும் தாயகம் திரும்புவதாக கூறியுள்ளனர்.

அகதிகளை ஐரோப்பிய யூனியனுக்குள் சேர்ப்பது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY