வீதி சிரமதான அடிப்படையில் புணரமைப்பு

0
185

(அப்துல்சலாம் யாசீம்-)

unnamed (6)திருகோணமலை மாவட்டத்தில் மொறவெவ பிரதேச சபைக்குற்பட்ட நாமல்வத்தை கிராமத்திற்குச்செல்லும் பிரதான வீதி பல வருடகாலமாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்ட நிலையில் இன்று (24) அவ்வீதியை சிரமதான அடிப்படையில் புணரமைக்கும் பணி ஆரம்பமானது.

மொறவெவ பிரதேச சபையின் செயலாளர் ஜூட் ராஜசிங்கத்திடம் நாமல்வத்தை-அவ்வை நகர்- மக்கள் கிராமத்திலுள்ள சங்கங்களின் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து பிரதேச சபையின் முயற்சியினால் இச்சிரமதான பணி நடைபெற்று வருகின்றது.

இவ்வீதியினால் அவசரமான கற்பிணி தாய்மார்களைக்கூட கொண்டு செல்லாத நிலையில் காணப்பட்ட இவ்வீதியினை விமானப்படை -பொலிஸ்-மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் -சிவில் சமூக அங்கத்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் எதிர்வரும் சனிக்கிழமையும் இச்சிரமதான நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் பிரதேச சபையின் செயலாளர் ஜூட் ராஜசிங்கம் தெரிவித்தார்.

unnamed (10)

LEAVE A REPLY