(Poem) காத்திருத்தல்

0
15

(Mohamed Nizous)

காற்றிருக்கும் வரை
இந்தக்
காத்திருத்தல் இருக்கும்.

வைத்திய சாலைகளின்
வராண்டாவில் காத்திருந்தே
அஸ்பிரினாய் கரையும்
அள்ளி வந்த வாழ்க்கை

முடி வெட்டும் சலூனில்
முன் ஆள் முடியும் வரை
கத்தரிக்கப் படும்
கடவுள் தந்த காலங்கள்

பாதையின் ஓரத்தில்
பஸ்கள் வரும் வரை
டயராகத் தேயும்
வியர்வை மணித்துளிகள்

தியேட்டர் வாசல்களில்
திரண்டிருப்போர் நேரங்கள்
வில்லனாய்ச் சாகும்
விரயமாய்ப் போகும்.

கவர்மண்டு ஆபிஸில்
காத்திருந்து காத்திருந்தே
கிழியும் படிவங்களாய்
ஒழியும் காலங்கள்

கஸ்டமர் சேர்விஸுக்கு
கோல் போட்டுக் காத்திருக்க
மொபைல் போண் battery போல்
முடியும் நேரங்கள்

வங்கி வரிசைகளில்
தங்கிருக்கும் நேரங்கள்
Slip ஆகிப் போய்
OD ஒழியும்.

கருவறையில் பத்துமாதம்
காத்திருப்பில் தொடங்கியது.
இறக்கும் வரை தொடர்கிறது-
இந்தக் காத்திருத்தல்.

LEAVE A REPLY