சட்ட விரோதமாக மணல் ஏற்றிய நான்குபேர் கைது!

0
121

(அப்துல்சலாம் யாசீம்)

Arrestதிருகோணமலை – கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட யான் ஓயா காட்டுப்பகுதிக்குள் சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய உழவு இயந்திரத்துடன் நான்கு பேரை நேற்று மாலை (23) கைது செய்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கெப்பித்திகொள்ளாவ- டி 05- வாகல்கட பகுதியைச்செர்ந்த கே.எம்.திலகரெட்ண (48 வயது) பியசேனகே ஹேரத் பண்டார (50 வயது) ஹஸான் மதுசங்க ரத்னாயக்க (20 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் உழவு இயந்திரம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் திங்கள்கிழமை திருகோணமலை நீதிமன்றத்திற்கு சமூகம் தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY