ஜெருசலேத்தில் 6 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையர்

0
103

140117173833-girl-in-shadows-story-topஇலங்கையர் ஒருவர் மீது ஜெருசலேத்தில் 6 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கியிருந்த சந்தேகநபர், அங்கு வீடு சுத்தம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுமியின் வீட்டுக்கு சுத்தம் செய்யும் பணிகளுக்காக சென்ற வேளையே அச் சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 46 வயதான குறித்த நபர் சுமார் 3 வருடங்கள் அவ் வீட்டில் பணிபுரிந்துள்ளார். சிறுமியின் தாய் உறங்கிக் கொண்டிருந்தவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து தாயிடம் சென்று சிறுமி இது குறித்து முறையிட்டவே, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இவரைக் கைது செய்வதற்காக ஜெருசலேம் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY