விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற முன்னின்று செயற்படுவேன்: இணைத் தலைவர் மன்சூர்

0
161

– றிசாத் ஏ காதர் –

unnamed (3)இறக்காமம் பிரதேச விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியமான 07 பிரச்சினைகளை, தான் நேரில் சென்று ஆராய்ந்தாகவும். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னின்று செயறப்படப்போவதாகவும் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேச விவசாய ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் ஒருங்கிணைப்பில் நேற்று திங்கட்கிழமை, இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபோதே, இணைத் தலைவர் மன்சூர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, இறக்காமம் மாணிக்கமடு பாலத்திலிருந்து பட்டியாத்தவணை, விக்கிளாமடு, சிக்கந்தர்வெளி ஊடாக வரிப்பத்தான்சேனையைச் சென்றடைவதற்கான பாதையினை அமைத்துத் தருமாறு, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பையிடம் – தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அதனை நிறைவேற்றித் தருவதற்கு, உதுமாலெப்பை உறுதியளித்துள்ளார் என்றும், இணைத் தலைவர் மன்சூர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“இறக்காமம் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த நான், இப் பிரதேச இணைப்புக் குழு தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து சந்தோசமடைகிறேன். இதனால், இங்குள்ள மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் என்னால் இலகுவாக இனங்காண முடிகிறது.

இங்குள்ள விவசாயிகளின் பிரதான பிரச்சினைகளாக சிலவற்றினை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

விவசாய நிலங்களைச் சென்றடைவதற்கான வீதிகள் அமைக்கப்பட வேண்டும். விக்கிளாமடு பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்கு நீரைக் கொண்டு செல்வதற்கான குழாய்களை நிர்மாணிக்க வேண்டிய தேவையுள்ளது. மழைக்காலத்தில் வாய்க்கால்கள் உடைவதனைத் தடுப்பதற்கான வழிவகைகளைச் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஹிங்குறான சீனித் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கழிவுநீர், இப் பிரதேசத்திலுள்ள நீர்நிலைகளில் கலப்பதனைத் தடுப்பது. யானைகளால் விவசாயிகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண்பது மற்றும் நெற்சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலைகளைத் திறந்து விவசாயிகளின் நெற்களைக் கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வது என்று, விவசாயிகளின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியுள்ளது.

இறக்காமம் பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான நீண்டகாலத் திட்டங்கள் எமது கைகளில் இல்லை. எனவே, அதற்கான 10 ஆண்டு காலத் திட்டமொன்றினை தயாரிக்குமாறு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். அவ்வாறானதொரு திட்டம் நமது கையில் இருந்தால்தான், அதற்கான நிதிகளை நாம் தேடிப் பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.

LEAVE A REPLY