நடந்து சென்ற வயோதிபப்பெண் உயிரிழப்பு: திருகோணமலையில் சம்பவம்

0
125

(அப்துல்சலாம் யாசீம்-)

accident-logoதிருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நடந்து சென்ற வயோதிபப்பெண் உயிரிழந்துள்ளதாகவும் -முற்சக்கர வண்டியுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் இளைஞனொருவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (23) அனுமதிக்கப்ட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த வயோதிபப்பெண் தம்புள்ளை-சிங்ஹகிரிமுல்லை-பன்சல வீதியைச்சேர்ந்த ஈ.ஜே.குணவத்தி (52 வயது) எனவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 19ம் திகதி தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் நடந்து சென்று கொண்டிருந்த வயோதிபப்பெண்ணுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவரே இன்று (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குச்சவௌி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட நிலாவௌி- 06ம் கட்டை பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் -முற்சக்கர வண்டி மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த அதே இடத்தைச்சேர்ந்த சக்திவேல் சசிதரன் (17 வயது) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் முற்சக்கர வண்டி சாரதியை கைது செய்துள்ளதாகவும் குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பூமரத்தடிச்சேனை பகுதியில் வேணும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் மருத்துவதாதி உயிரிழந்துள்ளதுடன் வேனின் சாரதி தாக்குதலுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

வேனின் சாரதியான திருகோணமலை-அன்புவௌி புரம் பகுதியைச்சேர்ந்த காலிதாஷன் டிலக்‌ஷன் (24 வயது) கைது செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY