ஆசிய மன்ற உதவியுடன் தெ.கி.பல்கலைக் கழகத்தினால் விசேட ஆய்வுப் பணிகள்!

0
121

(அஸ்லம் எஸ்.மௌலானா)

unnamed (2)ஆசிய மன்றத்தின் நிதியுதவியுடன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படவிருக்கின்ற ஆய்வுப் பணிகள் குறித்த கலந்துரையாடல் பல்கலை உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஆசிய மன்றத்தின் சார்பில் அதன் நிகழ்ச்சித் திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் கலந்து கொண்டு, உபவேந்தர், பல்கலையின் வெளிவாரி கற்கை நிலைய பணிப்பாளர் கலாநிதி ஹன்சியா ரவூப் மற்றும் ஆய்வுப் பணிக்காக தெரிவு செய்யப்பட்ட விரிவுரையாளர்களுடன் இச்செயற்திட்டம் தொடர்பிலான கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.

இதன்போது உள்ளூராட்சி மன்றங்களில் மகளிர் பங்களிப்பு, பொருளாதார மேம்படுத்தலில் உள்ளூராட்சி மன்றங்களின் வகிபாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பட்ஜெட் தயாரிப்பு, பொது நிறுவனங்களின் நம்பிக்கை, கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையில் சமூக, சூழல் தாக்கங்கள், நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளை மேம்படுத்துவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த ஆய்வுப் பணிக்காக தெரிவு செய்யப்பட்ட நான்கு பிரதான விடயப்பரப்புகளுக்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டதுடன் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

கொரிய நாட்டின் கொய்க்கா செயற்றிட்ட பிரதிநிதிகளும் ஆசியா மன்றத்தின் உயர் அதிகாரிகளும் அண்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து, உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தலைமையில் பீடாதிபதிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY