உரத் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு – 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
101

201608231303450534_Gas-leaks-from-Bangladesh-fertilizer-plant-50-people-ill_SECVPFவங்காளதேசத்தின் துறைமுக நகரமான சிட்டகாங் நகரில் கர்ன்னாபுலி ஆற்றங்கரையோரம் விவசாய உரங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. நேற்றிரவு இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, இங்குள்ள ஒரு கொதிக்கலனின் இணைப்பு குழாயில் இருந்து விஷத்தன்மை மிக்க அம்மோனியா வாயு கசிய ஆரம்பித்தது.

இந்த விஷவாயுவை சுவாசித்த பலர் மூச்சுத்திணறல், இருமல் மற்றும் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷவாயு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்து கொண்டதால் அங்கு வசிப்பவர்களை வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஷவாயுவால் பாதிக்கப்பட்ட சுமார் 50 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY