பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மீது காடையர்கள் தாக்குதல்

0
282

(எம்.எஸ். சம்சுல் ஹுதா)

wazeethபொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ்அப்துல் வாஸீத் மீது இன்று (23) மாலை காடையர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொத்துவில் முர்சானா சந்தியில் குழுமிநின்ற காடையர் குழுவினர், மது போதையுடன் காணப்பட்டதுடன் வீதியால் சென்ற முன்னாள் தவிசாளரிடம் வாக்குவாதப்பட்டதுடன் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலைத் தொடரந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் தவிசாளர் பொத்துவில் பொலீஸாரிடம் முறைப்பாடு ஒன்றையும் பதிவுசெய்துள்ளார்.
இதனைத் தொடரந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீஸார் மற்றம் ஜீப் வண்டிகள் மீதும் குறித்த குழு தாக்குதலை நடாத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

தற்போது தாக்குதலை நடாத்திய குழுவில் ஒருவரை பொலீஸார் கைது செய்துள்ளதுடன் ஏனையவர்களை தேடும் பணியை பொத்துவில் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY