சரியான தீர்வினை காலதாமதமின்றி பெற்றுத்தாருங்கள்: மக்கள் உருக்கமான வேண்டுகோள்

0
116

(அப்துல்சலாம் யாசீம்)

20160823_100614சரியான தீர்வினை காலதாமதமின்றி பெற்றுத்தருமாறு நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலனியின் முன் மக்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்தனர்.

நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலனியின் மக்கள் சந்திப்பு இன்று (23) மூதுார் திரிசீடி மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழ் முஸ்லீம் மக்கள் தங்களது முறைப்பாடுகளை ஆணைக்குழுவின் முன் பதிவு செய்தனர்.

இதில் காணாமல் போனோர் தொடர்பாகவும் தங்களது உயிர் சொத்துக்கள் இழப்பீடு தொடர்பாகவும் மக்கள் பதிவு செய்தனர். குறிப்பாக உண்மை, நீதி, நல்லிணக்கம், மீள் நிகழாமைக்கான ஆலோசனை, விசேட வழக்குத் தொடுப்பவருக்காக உள்ளடக்கிய நீதிப் பொறிமுறை, காணாமல் போனோரின் விடயங்களை கையாள்வதற்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன இவ் ஆணைக்குழுவின் தொனிப் பொருளாக விசாரனைகள் இடம் பெற்றது.

20160823_100625 20160823_103613

LEAVE A REPLY