வாழைச்சேனை வைத்தியசாலையின் கூரை உடைந்து வீழ்ந்தது

0
147

(வாழைச்சேனை நிருபர்)

07நேற்று (22) திங்கள்கிழமை இரவு பெய்த மழையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எஸ்.தட்சனாமூர்த்தி தெரிவித்தார்.

நேற்று இரவு வெளிநோயாளர் பிரிவு இயங்கிக் கொண்டு இருக்கும் போது இரவு 07.30 மணியளவில் சத்தத்துடன் வெளிநோயாளர் பிரிவின் கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது. கூரை உடைந்து வழும் போது தாதி உத்தியோகத்தர் ஒருவர் கடமையில் இருந்துள்ளார். அவர் எதுவித காயமும் இன்றி தப்பியுள்ளார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் உள்ள உட்கூரைகள் சில இடங்களில் வெடித்துக் காணப்படுவதால் ஊழியர்கள் அச்சத்துடன் தங்களது கடமைகளை மேற்கொள்கின்றனர்.

03 02

LEAVE A REPLY