புட்டம்பை பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் அழிப்பு

0
267

masjid 1அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மாநகர எல்லைக்கு உட்பட்ட புட்டம்பை மஸ்ஐிதுல் ஜலாலீயா பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் அழித்து ஒழிக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலிகளினால் அழிக்கப்பட்ட அக்கரைப்பற்று, புட்டம்பை மஸ்ஐூதுல் ஜலாலீயா பள்ளிவாசல் கடந்த 27 வருடங்களாக பாழடைந்து காணப்பட்டிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) துப்புரவு செய்து புனரமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இளைஞர்களால் துப்புரவு செய்யப்பட்ட குறித்த பள்ளிவாசல், நேற்று (22) இரவு இனந்தெரியாதோரால் இவ்வாறு உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பில் விசாரணை செய்து உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

#Thinakaran

masjid 2

LEAVE A REPLY