இந்தியாவில் இருமுறை நிலநடுக்கம்

0
100

201608231206552552_Two-earthquakes-in-Assam-no-report-of-injury-damage_SECVPFஅசாமில் 3.1 மற்றும் 5.5 ரிக்டர் அளவுக்கொண்ட இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களை பீதியில் வீடுகளை விட்டு ஓடச் செய்தது.

நிலநடுக்கம் காரணமாக யாரும் காயம் அடைந்தனரா என்பது தொடர்பாக எந்தஒரு தகவலும் கிடையாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொருட் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்தான தகவலும் கிடையாது. இன்று காலை 5:30 மணியளவில் 3.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் கவுகாத்தி மற்றும் பிற பகுதியில் உணரப்பட்டது. கார்பி அங்லாங் மாவட்டத்தில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இரண்டாவது நிலநடுக்கம் 7:41 மணியளவில் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 5.5 ரிக்டர் அளவுக்கொண்ட இந்நிலநடுக்கம் மியான்மர் – இந்திய எல்லைப் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY