ஜே.வி.பி. தலைவர்கள் பலரின் இரகசியங்களை அரசாங்கம் மூடிமறைக்கிறது: முஹமட் முஸமில்

0
118

mohammed-muzammilஅனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் பலரின் இரகசியங்களை அரசாங்கம் மூடிமறைத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் முஹமட் முஸமில் தெரிவித்துள்ளார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் விற்பனை கண்காணிப்பு அதிகாரிகளை இணைத்துக்கொள்ளும் போது மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் நேற்று(23) முன்னிலையானார்.

இதனை தொடர்ந்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசாங்கம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவை கொண்டு அரசியல் பழிவாங்கல்களை மேற்கொண்டு வருகின்றது. இதனை நியாப்படுத்தும் பணியில் மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டுள்ளது.

அதற்கு காரணம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் பலரது இரகசியங்களை அரசாங்கம் மூடி மறைத்துள்ளது. அதற்கு பிரதிபலனாகவே மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.

LEAVE A REPLY