மனைவி முன்­னி­லையில் தொழிலதிபர் ஷகீம் சுலைமான் கடத்தல்

0
155

article_1471857021-DSC_3162பம்பலப்பிட்டி கொத்­த­லா­வல மாவத்­தையில் வசித்துவந்த தொழிலதிபர் மொஹமட் ஷகீம் சுலைமான் தனது வீட்டின் பிர­தான நுழை­வாயிலுக்கு அருகில் வைத்து நேற்று முன்தினம்(21) நள்­ளி­ரவு வேன் ஒன்றில் வந்த அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­களால் ­க­டத்தப்பட்டுள்ளதாக அவரின் மனைவி பம்­ப­ல­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளார்.

அந்த முறைப்­பாடு மீதான் மேல­திக விசா­ர­ணை­களை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார். நேற்று முன் தினம் நள்­ளி­ரவு வேளையில் பிர­பல உண­வகம் ஒன்றில் நண்­பர்­க­ளுடன் சேர்ந்து உணவருந்தி­விட்டு மொஹமட் சகீப் சுலைமான் எனும் வர்த்­தகர் பம்­ப­ல­பிட்டி கொத்­த­லா­வல மாவத்­தையில் உள்ள தனது வீட்­டுக்கு சென்­றுள்ளார்.

வீட்டின் அருகே சென்­றுள்ள அவர் வீட்டின் பிர­தான வாயிலை திறக்­கு­மாறு மனை­விக்கு தொலை­பே­சியில் தனது காருக்குள் இருந்­த­வாறே அறி­வித்­துள்ளார். இதன்­போது வீட்­டுக்குள் இருந்து வெளியே வந்­துள்ள மனைவி பிர­தான வாயிலை திறந்­துள்ளார்.

திறக்கும் போது, காரில் இருந்த தனது கண­வ­ரான வர்த்­த­கரை வேனொன்றில் வந்த அடை­யாளம் தெரி­யாத நபர்கள் கடத்திக் கொண்டு செல்­வதை தான் கண்­ட­தாக மனைவி நேற்று பம்­ப­ல­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்ளார். வர்த்­த­கரின் கைக்­க­டி­காரம் கடத்தல் இடம்­பெற்ற இடத்­தி­லி­ருந்து மீட்­கப்பட்­டுள்­ள­துடன் அவ்­வி­டத்தில் போராடும் போது வர்த்­த­க­ருக்கு ஏற்­பட்ட காயத்­தி­லி­ருந்து சிந்­தி­யி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கத்­தக்க இரத்தக் கறை­க­ளையும் பொலிஸார் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

குற்றத் தடுப்புப் பிரிவின் மேல­திக விசா­ர­ணை­களில், விசா­ர­ணை­க­ளுக்கு தேவை­யான மேல­திக தக­வல்கள் சிலவும் கிடைக்கப் பெற்­றுள்­ளன. குறித்த வர்த்­தகர் வெளி நாட்­டி­லி­ருந்து உடை­களை இறக்­கு­மதி செய்யும் பிர­தான இறக்­கு­ம­தி­யாளர் என கூறும் பொலிஸார் குறித்த வர்த்­த­க­ருக்கு பலர் மோசடி செய்­துள்­ள­தா­கவும் அது தொடர்பில் அவ்­வர்த்­தகர் குற்றப் புல­னாய்வுப் பிரிவு மற்றும் மோசடி தடுப்புப் பிரிவு ஆகி­ய­வறில் நான்கு முறைப்­பா­டு­களை செய்­துள்­ள­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

LEAVE A REPLY