காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து

0
116

காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளார். இன்று காலை குறித்த சட்டமூலம் மற்றும் நிதி முகாமைத்துவ பொறுப்புத் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றில் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த மசோதாவுக்கு கூட்டு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்த போதும், சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளார்.

LEAVE A REPLY