விபத்தில் பெண் தாதி உயிரிழப்பு

0
121

(அப்துல்சலாம் யாசீம்)

accident-logoதிருகோணமலை-சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பூமரத்தடிச்சேனை பிள்ளையார் கோயிலுக்கருகில் இன்று (23) காலை வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் தாதியர் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஈச்சிலம்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் தோப்பூர்-பட்டித்திடல் பகுதியைச்சேர்ந்த எஸ்.சந்தானா லெட்சுமி (48 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை நோக்கி சென்ற வேன் மோட்டார் சைக்கிளுடன் மோதியதினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் தாதியரின் (மிட்வைப்) சடலம் சேறுநுவர பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக சேறுநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY