கொழும்பு நகரில் சட்டவிரோத நடைபாதைகளில் உள்ள கடைகளை அகற்றுவதற்கு காலக் கேடு விதிப்பு

0
167

(அஷ்ரப் ஏ சமத்)

unnamed (6)கொழும்பு நகரில் உள்ள சட்டவிரோத நடைபாதைகளில் உள்ள கடைகளை எதிா்வரும் செம்படம்பா் 15ஆம் திகதிக்கு முன் அகற்றுவதற்கு காலக் கேடு விதித்துள்ளதாக மாகாணசபைகள் உள்ளுராட்சி சபைகள் அமைச்சின் செயலாளா் கமல் பத்மசிறி தெரிவித்தாா்.

மேற்கண்டவாறு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் அமைச்சின் செயலாளா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே அமைச்சா் பைசா் முஸ்தாபவின் அறிவுரைக்ககமைய அமைச்சின் செயலாளா் மேற்படி காலக் கேட்டினை தெரிவித்துள்ளாா். இக் கூட்டத்தில் கொழும்பு மாநகர சபையின் ஆணையாளா், வீதி அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு நகரத்திற்குட்பட்ட பொலிஸ் அதிகாரிகள், அபிவிருத்தி லொத்தா் சபை, மற்றும் அதிா்ஸ்டலாபச் சீட்டு விற்பனை நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

இங்கு கருத்து தெரிவத்த பொலிசாா், அபிவிருத்தி லொத்தா் மற்றும் சுயதொழில் ஈடுபடுபவா்கள், பத்திரிகை விற்பனையாளா்கள் உரிய அனுமதிப்பத்திரம் வைத்துள்ளதாக தெரிவித்தனா். இருந்தும் நடைபாதசாரிகள் நாளந்தம் இந்த விற்பனையாளா்கள் மூலம் பாதாசாிகளுக்கு நடைபாதைகளுக்கு பாரிய இடைஞ்சல் ஏற்பட்டு வருகின்றது. ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுளது. இவா்களது சுயதொழில் வண்டிகள், ஒலிபெருக்கி, மற்றும் விற்பனை பொருட்களை நடைபாதைகளின் இரு மருங்கிலும் குவித்து விற்பனை செய்வதனால் நடைபாதைகளுக்கு பாரிய பிரசச்சினைகள் எழுந்துள்ளதாக தெரிவித்தனா். இவா்களுக்கானதொரு பொது விற்பனை நிலையமொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டது. அத்துடன் பாதையோரம் சில கடைகள் பாதையோரங்களை தமது விற்பனை நிலையங்களை பெருக்கி நடைபாதைகளை தடுத்துள்ளதாகவும் பொலிசாாினால் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே முன்னாள் பாதுகாப்புச் செயலாளா் கோட்டாப ராஜபக்சவின் முன்னெடுத்த அழகான கொழும்பு நகரம் திட்த்தினை நகர அபிவிருத்தி அதிகார சபையின் மெஹா பொலிஸ் அமைச்சுடன் இனைந்து மேலும் அத்திட்டத்தினை விரிவுபடுத்தி அதனை தொடா்ந்தும் செயல்படுத்துவதற்கும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே அமைச்சா் பைசா் முஸ்தாபாவினால் ஜனாதிபதி பிரதமருக்கு கொழும்பு நகர அபிவிருத்தி நடைபாதை வியாபாரிகளது பிரச்சினைகளை கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளா் அங்கு தெரிவித்தாா்.

LEAVE A REPLY